19
January, 2026

A News 365Times Venture

19
Monday
January, 2026

A News 365Times Venture

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' – மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

Date:

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றது. இப்படி ஆளுநரின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகும் காலங்களில் அமைதியாக இருப்பார். சில காலத்துக்கு பிறகு மீண்டும் தமிழக அரசை சீண்டுவார். அந்தவகையில் தற்போது தமிழகத்தில் தகுதியற்ற டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறது எனக்கூறி தமிழக அரசை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ஆளுநர் ரவி

சென்னை குடிமக்கள் மன்றம் சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர் டிகோட்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரவி, ஏர் மார்ஷல் (ஓய்வு) எம். மாதேஸ்வரன், கர்னல் (ஓய்வு) ஜான் பிரின்ஸ், சிசிஎப்-ன் தலைவர் கே.டி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பயணத்தில் ஒரு திருப்புமுனை தருணம். இது நாட்டின் தேசிய பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது.

உலக அரங்கில் இந்தியா தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதில் ஒரு பெரிய மாற்றமாக எதிர்கால சந்ததியினர் இந்த நடவடிக்கையைப் படிப்பார்கள். இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட சென்சார்கள் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களால் தயாரிக்கப்பட்டது. அதை செய்த இந்திய இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளுநர் ரவி

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் நாட்டின் திறன் வளர்ந்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பல எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்திய அரசியல் தலைமை எவ்வாறு பதிலளித்தது என்பது நமக்கு தெரியும். ஆனால் 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை ஒரு புவியியல் வெளிப்பாடாக மட்டுமே புரிந்துகொள்வதன் மூலம் அந்த நாடு பல பகுதிகளை இழந்திருக்கிறது. வங்காளதேசத்துடன் நிலப்பகுதிகளை பரிமாறிக்கொள்வது, கபாவ் பள்ளத்தாக்கை பர்மாவிற்கு கொடுத்தது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது உள்ளிட்ட பல உதாரணங்கள் இருக்கின்றன.

தேசிய கல்விக் கொள்கை

ஆனால் பாரதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதம், கலாசாரம், மொழியியல் மற்றும் சமையல் உள்ளிட்டவற்றில் பல்வேறு பன்முகத்தன்மைகளைக் கொண்ட ஒரு தேசமாக இருந்து வருகிறது. உலகில் எந்த நாடும் பாரதத்தைப் போல பன்முகத்தன்மையை பெருமைப்படுத்தவோ அல்லது கோரவோ முடியாது. தேசிய கல்விக் கொள்கை என்பது ஒரு புரட்சிகரமான முயற்சி. சிலர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். இது சாத்தியமில்லை.

அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. தேசிய கல்விக் கொள்கை சுயசார்பு மற்றும் நமது ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கு அவசியம். தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஆண்டும் 7,000-க்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டங்களை பெறுகிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் டாக்டர் பட்டம் பெற்றவர்களிடம் எதிர்பார்க்கப்படும் கல்வியையும், திறன்களையும் கொண்டிருக்கவில்லை.” என்று மீண்டும் தமிழக அரசை சீண்டி இருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...