இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் எனத் தேர்தல் களம் பரபரத்தது.
நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு 70 சட்டமன்றத் தொகுதியில் 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கிறது பா.ஜ.க. 22 இடங்களில் மட்டுமே வென்று தொடர்ந்து தனது 10 ஆண்டுகால ஆட்சியை இழந்திருக்கிறது ஆம் ஆத்மி.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்தியாவின் தலைநகரிலும் ஆட்சியைக் கைப்பற்றி தன் பலத்தை மீண்டும் நிரூபித்திருப்பதாக பா.ஜ.க ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து என்ன நினைகிறீர்கள் எனபதை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.