11
May, 2026

A News 365Times Venture

11
Monday
May, 2026

A News 365Times Venture

டி.கே. பிரபு: காங்கிரஸ் பாரம்பர்யம்; இளம் ‘டாக்டர்’ – காரைக்குடியில் இருந்து `முதல்' அமைச்சர்!

Date:

சிவகங்கை சீமையின் ‘செட்டிநாடு’ என அழைக்கப்படும் காரைக்குடி தொகுதியில் இப்போது கொண்டாட்ட வாணவேடிக்கைகள் அதிர்கின்றன.

காரணம், 1952-ல் தொடங்கி இன்றுவரை பல தேர்தல்களைக் கண்ட காரைக்குடிக்கு, முதல்முறையாக ஒரு ‘அமைச்சர்’ அந்தஸ்து கிடைத்திருக்கிறது!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார் 42 வயது பல் மருத்துவர் டி.கே.பிரபு.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு தொகுதிகள் இருந்தாலும், காரைக்குடிக்கு மட்டும் இத்தனை காலமும் ‘அமைச்சர் யோகம்’ எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

டி.கே.பிரபு தேவகோட்டை அருகே உள்ள இருமதியைச் சேர்ந்தவர். காரைக்குடியில் பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது தந்தை துரை. கருணாநிதி முன்னாள் ராணுவ வீரர். காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பம். தாயார் சரஸ்வதி தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர். மனைவி, ஒரு மகன், ஒரு மகள். குடும்பமே அரசியலில் ஊறியிருந்தாலும், பிரபுவுக்கு இது ஒரு ‘மெகா ஜாக்பாட்’ தான்!

தற்போது தவெக சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் பிரபு, இள ரத்தமாக அமைச்சரவைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பு சிவகங்கை தொகுதியிலிருந்து ராஜகண்ணப்பன், பாஸ்கரன் போன்றவர்களும், திருப்பத்தூர் தொகுதியிலிருந்து மாதவன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன் போன்றவர்களும் அமைச்சர்களாக கோலோச்சியுள்ளனர்.

ஆனால், 1952 முதல் 2021 வரை 16 தேர்தல்களைச் சந்தித்த காரைக்குடி தொகுதிக்கு, ஒரு அமைச்சரைக்கூடத் தரவில்லை என்ற ஏக்கம் தொகுதி மக்களிடம் நீண்டகாலமாக இருந்தது.

“இத்தனை வருஷ ஏக்கத்தைப் பிரபு தீர்த்து வச்சுட்டாரு!” என செட்டிநாடு ஏரியா முழுக்க இப்போது ஒரே பேச்சாகக் கிடக்கிறது.

அமைச்சராக முடிசூடியிருக்கும் இந்த இளம் ‘டாக்டர்’, காரைக்குடிக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை ஹெல்த்தியாக கொண்டு வருவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மோடி தங்கத்தை தவிர்க்க சொல்வது ஏன்? தங்கத்துக்கும் அந்நிய செலாவணிக்கும் என்ன தொடர்பு? – முழு விவரம்!

"ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்; வெளிநாட்டு பயணங்களை தள்ளி வையுங்கள்; முடிந்தவரை வீட்டிலிருந்து...

`சிங்கப்பூர் ஏன் உலகில் முன்னோடி நாடு?' | இயக்குநர் சீனு ராமசாமி

நம் தேசத்தில் நாம் 'லஞ்சம்' (Bribery) பற்றி அதிகம் பேசுகிறோம். லஞ்சம்...

ஒரு வாக்கில் தோல்வி; பெரியகருப்பனின் புகார் – `ஆதாரம் இல்லை' தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம்...

கேரளம்: `இரண்டரை ஆண்டுக்கு ஒரு முதல்வர்?' – 140ல் 102 வென்றும் காங்கிரஸ் முடிவு வெளியாவதில் தாமதம்!

கேரள மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102...