25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!

Date:

பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியிருக்கும் ஜெம் வீரமணி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தவெக அமைச்சர்கள் லோகேஸ் தனபாலும், வெங்கட்ரமணனும் அவருடன் மேடையில் இருப்பதைப் போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெம் வீரமணி

இந்த நிகழ்வில் ‘வீரமணி எங்களது குடும்ப நண்பர்’ என அமைச்சர் லோகேஷ் தனபால் பேசியிருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. திமுகவினர் இந்த வீடியோவை ஷேர் செய்து தவெக அமைச்சர்களை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி குறித்து அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘ஜூலை 5 ஆம் தேதி பத்திரிகையாளர் ஒருவரின் அழைப்பின் பேரில் அமைச்சர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அமைச்சர் லோகேஷூக்கு அந்த பத்திரிகையாளருடன் தனிப்பட்ட நட்பும் கூட கிடையாது. பத்திரிகையாளர் என்ற மரியாதையின் அடிப்படையில் அவரின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருக்கிறார்.

ஜெம் வீரமணியோடு அமைச்சர்கள்
ஜெம் வீரமணியோடு அமைச்சர்கள்

அமைச்சர்கள் லோகேஷூம் வெங்கட்ரமணனும் மட்டுமில்லை. அமைச்சர் ராஜ்மோகன் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் ஆகியோரையும் அழைத்திருக்கின்றனர். வேறு சில நிகழ்ச்சிகள் இருந்ததால் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை.

கட்டாயம் வந்துவிடுங்கள் என மீண்டும் மீண்டும் அழைத்ததால்தான் அமைச்சர்கள் லோகேஷூம் வெங்கட்ரமணனும் சென்றிருக்கின்றனர். அமைச்சர் லோகேஷூக்கு சேலம். ஜெம் வீரமணிக்கு திருச்செங்கோடு. அவர் ஒரு பிரபல தொழிலதிபர். பொது வாழ்வில் அரசியல்வாதிகள் பலருக்குமே ஜெம் வீரமணியை தெரியும். அந்த அடிப்படையில் ஒரு மரியாதைக்காகதான் ஜெம் வீரமணி குறித்து அமைச்சர் லோகேஷ் பேசியிருக்கிறார். இதை எப்படி தவறு சொல்ல முடியும்?

ஜெம் வீரமணியின் வீட்டில் நடப்பதெல்லாம் அமைச்சருக்கு எப்படி தெரியும்? ஜூலை 5 ஆம் தேதி ஜெம் வீரமணி கைதும் ஆகவில்லை. அப்படியிருக்க சபை நாகரீகத்துக்காக பேசிய ஒன்றை திமுகவினர் அரசியலாக்குவது அறமற்ற செயல். போக்சோ வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரகசியமாக நடக்கிறது. அதில் இப்படி ஆள் ஆளுக்கு கட்டுக்கதைகளை கிளப்பி சேற்றை வாரி இறைப்பது நல்லதல்ல’ என்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஒரு நாள் ஈரான் மக்கள் சுதந்திர காற்றை.!" – ஐ.நாவில் நெதன்யாகு பேச தொடங்கியதும் வெளியேறிய நாடுகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.அதில் பல்வேறு நாட்டு...

மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது?

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வருகிற செப்டம்பர்...

"நிர்வாண வீடியோவை பரப்புகிற கேவலமான ஆள் நானில்லை" – பெண் குற்றச்சாட்டு குறித்து கருப்பு முருகானந்தம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது,...

“இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ்

மதுராந்தகத்தில் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தபோது தவெக அமைச்சர் ஆதவ்...