8
September, 2026

A News 365Times Venture

8
Tuesday
September, 2026

A News 365Times Venture

சென்னையில் ஒரே நாளில் இரு கொலைகள்: "இது இந்திய அளவில் தலைகுனிவை.!" – நயினார் நாகேந்திரன் காட்டம்

Date:

சென்னையில் நேற்று (செப்டம்பர் 6) ஒரே நாளில் நடந்த கொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

நயினார் நாகேந்திரன் தனது பதிவில்,

“தலைநகரமா அல்லது கொலைநகரமா?

அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓடோட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாகப் பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்குக் கொடூரமாகத் தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பதைபதைக்கச் செய்கிறது.

கொலை

தலைநகரில் ஒரே நாளில் நடந்த இந்த இரு படுகொலைகளும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் “Reels” ஆட்சியின் “Reality”-யை மக்களுக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக, கிட்டத்தட்ட 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டுள்ள தமிழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்திற்குப் பிழைப்புத் தேடி வந்தவருக்கும் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பது இந்திய அளவில் நமக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும். நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்களிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் திரு. விஜய் அவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது.” என்றிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாணவர் தற்கொலை: “மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட்" – மாணிக்கம் தாகூர்

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் சாய் அபிநோவ் (18)....

ஜான் ஆரோக்கியசாமி: “பணி நியமனம்; அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்?" – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர்...

"முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்" – பெ.சண்முகம் கண்டனம்

சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய்யின்...

"கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் Take Diversion நாடகம்"- முதல்வர் மீது அன்பில் மகேஸ் விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை,...