20
April, 2025

A News 365Times Venture

20
Sunday
April, 2025

A News 365Times Venture

'சீமானின் பெரியார் விமர்சனம் நல்லதுதான்; விஜய்யிடம் நம்பகத்தன்மை இல்லை' – சசிகாந்த் செந்தில் பேட்டி

Date:

“தொண்டர்களின் விருப்பத்தைக் கேட்காமல் ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க-வுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்தது சரிதானா?”

செல்வப்பெருந்தகை

“எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் எனத் தலைவர்களும் தெரியும். இந்தியா கூட்டணி வேட்பாளர் தானே போட்டியிடுகிறார். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.”

“ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவர முயற்சி, நன்கொடை வசூலிப்பு என செல்வப்பெருந்தகையின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே?”

சத்தியமூர்த்தி பவன்

“வெளிப்படையாக விண்ணப்ப விநியோகம் நடப்பதால், ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவர முடியாது. காங்கிரஸுக்கு எனத் தனி அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது. அதில், ‘நன்கொடை வசூலிக்கலாம், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தைக் கட்சிக்கு வழங்க வேண்டும்’ என்கிற விதி இருக்கிறது. எனவே இதில் எந்த தவறும் இல்லை”

“ஆனால், ‘இளைஞர் காங்கிரஸில் போலி உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது’ என்கிற கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனம் உண்மைதானே?”

கார்த்தி சிதம்பரம்

“முன்பெல்லாம் மாநில தலைவர்கள் யார் பெயரைச் சொல்கிறார்களோ அவர்கள்தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர். இப்போது அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களுக்குத்தான் பதவி. நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறையில்கூட சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதற்காகப் பழைய நடைமுறைக்குச் செல்ல முடியாது. எனவே இதிலிருக்கும் தவறுகளைச் சரி செய்ய வேண்டும்”

” ‘விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும்’ என்ற செல்வப்பெருந்தகையின் அழைப்பு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே?”

த.வெ.க தலைவர் விஜய்

“பா.ஜ.க-வினர் இந்திய அரசியலைப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதற்குத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தனியாகச் சண்டை செய்து பா.ஜ.க-வினரை வென்றுவிட முடியாது. அவர்களைத் தனது கொள்கை எதிரியாக விஜய்யும் அறிவித்திருக்கிறார். எனவேதான் செல்வப்பெருந்தகை கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கலாம்”

“ஆனால் ‘விஜய் தமிழக வளர்ச்சிக்கு எதிராகப் பேசுகிறார்’ என்றல்லவா கார்த்தி சிதம்பரம் சொல்கிறார்?”

“விஜய்யின் அரசியலில் ஆழம் இல்லை என்பது உண்மைதான். ஒருவர் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு அவரிடம் நிலைத்தன்மை, நம்பகத்தன்மையெல்லாம் வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமாகப் பேசினால் மக்கள் நம்பமாட்டார்கள். ‘பெரியாரைப் பின்பற்றுவேன்’ எனச் சொல்கிறார். பிறகு பிற அரசியல்வாதிகளைப் போல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தான் போய் நிற்க மாட்டேன்’ என்கிறார். இதில் எங்கு நம்பகத்தன்மை இருக்கிறது?.

அதிகாரம் கிடைக்கும் என்பதற்காகவே அவருடன் ஒரு கூட்டம் ஒன்றிணைத்துள்ளது. மாறாகச் சித்தாந்த ரீதியாக அவர்கள் இணையவில்லை. அவர்களை வழிநடத்தும் அளவுக்கு விஜய்க்கும் தலைமைப் பண்பு இருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். ஆழமான கொள்கைப் பிடிப்பு இல்லாத ஒருவர் திடீரென வந்து நான், அப்படி, இப்படி என்றெல்லாம் பேசுவது சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஒருவரின் புகழை மட்டுமே வைத்து உருவாகும் இயங்கங்கள் நீண்ட காலத்துக்கு நிற்காது.”

சீமான்

“பெரியார் குறித்த சீமானின் விமர்சனத்தை வரவேற்பதாக பா.ஜ.க தலைவர்கள் சொல்கிறார்களே?”

“சீமானின் பேச்சையெல்லாம் ஆழமாகப் பார்க்க வேண்டியதில்லை. பெரியார் ஒரு தத்துவம். அவருடைய வாழ்க்கையில் நடந்த சில பகுதிகளை மட்டும் திரிந்து பேசுவது கேவலமான விஷயம். இந்த யுக்தி தமிழகத்தில் எடுபடாது. பா.ஜ.கவில் இருக்கும் சிலர் தலைவர்கள் வேண்டுமானால் ஆதரிக்கலாம். அந்த கட்சியிலிருக்கும் பலருக்கு உடன்பாடு இல்லை. ஆகவே அவர்கள் செய்வது நல்லதுதான். இதனால் பா.ஜ.க இன்னும் சில காலத்தில் கடையைச் சாத்தும் இடத்துக்குச் செல்லும்”

” ‘இந்தியா’ கூட்டணியைக் கலைத்துவிடலாம்’ என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொந்தளித்திருக்கிறாரே?”

“அவரவரின் உரிமைகளைப் பேசுவதற்கு இந்தியா கூட்டணியில் வாய்ப்பு இருக்கிறது. அதன்படி அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன். இந்த பிரச்சினையைத் தலைவர்கள் பேசி சரி செய்து கொள்வார்கள்”

‘இந்தியா’ கூட்டணி

“ஆனால் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒற்றுமையுடன் களம் காணவேண்டிய ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள், எதிரும் புதிருமாக டெல்லி சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது பலவீனத்தைத் தானே காட்டுகிறது?”

“இதைப் பலவீனம் எனச் சொல்லிவிட முடியாது. முதலில் இந்தியா கூட்டணி இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிரானது. இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமான அரசியல் இருக்கிறது. அதற்கு ஏற்றவகையில் செயல்படுவதுதான் உண்மையான அரசியல். அந்த தெளிவு இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ஜ.கவை எதிர்ப்போம்”

டெல்லி தேர்தல்

“கூடவே ‘இந்தியா’ கூட்டணியிலிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸைக் கைவிட்டிருக்கின்றனவே..!”

“நான் ஏற்கெனவே சொன்னதுபோல நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டசபைத் தேர்தல்களை வெவ்வேறு விதமாகவே கட்சிகளும், வாக்காளர்களும் பார்ப்பார்கள். இதனால் எந்த பிரச்னையும் இல்லை”

பிரியங்கா காந்தி, ராகுல்

“தோல்வி கிடைக்கும் என்பதால்தான் டெல்லி தேர்தலில் ராகுல், பிரியங்கா கூட ஆர்வம் காட்டவில்லை என்கிறார்களே?”

“டெல்லியில் காங்கிரஸ் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்தது. டெல்லியை உருவாக்கியதே நாங்கள்தான். இன்றும் பல இடங்களில் மக்கள் காங்கிரஸைத்தான் விரும்புகிறார்கள். தற்போது காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி என முன்முனை போட்டி நிலவுகிறது. நாங்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களை வகுத்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.”

“பரந்தூர் உள்ளிட்ட பல போராட்டங்களில் மக்களைப் போராட்ட விடாமல் தமிழக அரசு தடுப்பதாகச் சர்ச்சை வெடித்திருக்கிறதே?”

“மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியைத்தான் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. மக்களை முடக்க வேண்டும் என்கிற எண்ணம் துளியும் இருக்காது. ஒரு சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரலாம் என்பதற்காகத் தடை விதித்திருக்கலாம்”

சாம்சங் போராட்டம்

“ஆனால் சாம்சங், செய்யாறு விவகாரத்திலெல்லாம் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இல்லையே?”

“உள்நோக்கத்துடன் நடந்திருக்காது. அறவழியில் போராடுவோருக்கு உரியப் பாதுகாப்பும், உரிமையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்கரே சகோதரர்கள்?

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை வரும்...

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்… என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி...

துரை வைகோ Vs மல்லை சத்யா: வெடித்துக் கிளம்பிய உட்கட்சி பஞ்சாயத்து!

ம.தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் திருச்சி தொகுதியின் எம்.பி-யுமான துரை வைகோ, இன்று...