22
October, 2026

A News 365Times Venture

22
Thursday
October, 2026

A News 365Times Venture

சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை – புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

Date:

போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக 18 வயதுக்குக் குறைவான சிறார்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறையின் சீனியர் எஸ்.பி திவ்யா ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ”புதுச்சேரியில் அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் உறுதிபூண்டிருக்கும் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை, 18 வயதுக்குட்பட்ட சிறார்களை மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் எனப் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

விபத்து | கோப்புப்படம்

கடந்த 18.10.2026 அன்று வில்லியனூர் – கொம்பாக்கம் சாலையில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் சிறார் ஒருவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டியவர், அதில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர், ஒருமாதக் குழந்தை என அனைவரும் காயமடைந்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பாக, சிறார் வாகன ஓட்டுநர் மீதும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அவரது பெற்றோரில் ஒருவர் மீதும் கிழக்கு போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும், சில பெற்றோர்களும் வாகன உரிமையாளர்களும் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது தொடர்ந்து கவனத்திற்கு வருகிறது. இத்தகைய செயல்கள் சிறார்களின் உயிருக்கு மட்டுமின்றி, பிற சாலைப் பயனாளர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 199A-இன் கீழ், சிறார்கள் வாகனம் ஓட்டுவது கடுமையான சட்ட விதிமீறலாகும் என்பதை புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

18 வயதுக்குக் குறைவானவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. சிறார் ஒருவர் மோட்டார் வாகனம் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி அவரது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் பொறுப்பேற்க நேரிடும். அதற்காக ரூ.25,000 வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

மேலும், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி, சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் சிறார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். சட்ட விதிகளின்படி, அச்சிறார் 25 வயதை அடையும் வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்றவராக இருப்பார்.

மேலும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி 12 மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்களும் வாகன உரிமையாளர்களும் பொறுப்புடன் செயல்பட்டு, சட்டப்படி தகுதியற்ற சிறார்களை எந்தச் சூழ்நிலையிலும் மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் எனப் புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் அதிபர் வீரமணி கைதாகி...

கார்த்திகா கைது விவகாரம்: 'திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை!' – வன்னிஅரசு காட்டம்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல்...

நா.த.க-வை ரவுண்டு கட்டும் த.வெ.க! டு கூட்டணி குழப்பத்தில் பா.ம.க-வினர்! | கழுகார் அப்டேட்ஸ்

திணறும் தமிழக காவல்துறை!குற்றவாளிகளின் ரீல்ஸ் கலாசாரம்...ஆளும் த.வெ.க-வினர்தான் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்காததற்கு Stephen Hubbard காரணமா? ட்ரம்ப் குறிப்பிடும் 'இந்த' நபர் யார்?

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை தொடங்கி அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்...