2
October, 2026

A News 365Times Venture

2
Friday
October, 2026

A News 365Times Venture

சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்கள்: "இப்போது மாநில அரசும் இந்தியைத் திணிக்கிறது" – ஸ்டாலின்

Date:

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாத்தான்குளத்தில் புதிதாக வழிகாட்டிப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில்தான், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றிருப்பது குறித்து திமுகத் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்…

“இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.

தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.

எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் ‘U Turn’ அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?

வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திம்மாவரம்: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம்; வகுப்பறைக்குள் தேங்கும் மழைநீர்- குழந்தைகள் கல்வி பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்து...

இந்தியில் வழிகாட்டிப் பலகை: எழுத்துக்கள் அழிப்பு; அலுவலர்கள் பணியிடை நீக்கம் – தமிழக அரசு

சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து...

"கைது செய்தாலும் போராடுவோம்" – தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது

மத்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்...

"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" – என்ன சொல்கிறார் திருமாவளவன்?

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெக சார்பில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்...