25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

சாதிவாரி கணக்கெடுப்பு: “2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" – மநீம தலைவர் கமல்ஹாசன்

Date:

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குக் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “மிகவும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பைத் தவிர்க்கவும், தள்ளிப்போடவும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது.” என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

இந்த முடிவை வரவேற்றிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், “நீங்கள் மக்களைக் கணக்கெடுக்கும்போதுதான் அவர்களைப் பார்க்கிறீர்கள். சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அர்பணிப்புடன், அனைவருக்காகவும் உழைத்த முந்திய தலைமுறைத் தலைவர்களை கௌரவித்தால்தான், இந்த சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரலாற்று ஆவணமாக மாறும்.

நீண்ட காலமாக சாதி அநீதிக்கு எதிராகவும், சம நிலைச் சமூகத்தை உருவாக்கவும், அதற்குரிய தரவுகளை ஒருங்கிணைக்கவும் மக்கள் நீதி மய்யம் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. எனவே, மத்திய அரசு நேற்று அறிவித்த சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

கமல்

அதேப்போல, தரவுகள் மக்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட வேண்டும். அது கோப்புகளில் தூங்கக்கூடாது. அதனால், 2011-ம் ஆண்டு நடந்ததைப் போல மீண்டும் நடக்காமல் மக்கள் முன் தரவுகள் சமர்பிக்கப்பட வேண்டும்” என பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு முறையான பேருந்து வசதி இல்லையே..!'- மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் என நீளும் சுற்றுலாத்...

“உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது" – விசிக திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம்...

"செங்கோட்டையன் பேசுறது சரியா…" – ஆளுநரிடம் கொதித்த டி.டி.வி.தினகரன்!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ரணகளக் காட்சிகளுடன் நடந்து வரும் நிலையில், திடீர் அரசியல்...

'35 நிமிட விவாதம்; கப்சிப் உதயநிதி; பரந்தூரை தாங்கும் தங்கம் தென்னரசு! – பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் நடந்து வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான...