25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

சக மாணவனை அரிவாளால் தாக்கிய மாணவன்: “வன்முறை வேர் படர்ந்துள்ளதா?" – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Date:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மீது சக மாணவன் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய உதவி ஆணயர் சுரேஷ், “8-ம் வகுப்பு படித்து வரும் இரண்டு நண்பர்களுக்கு மத்தியில் பென்சில் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மாணவர்களும் பேசாமல் இருந்துள்ளனர். அதன் விளைவாக, இன்று ஒரு மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் தாக்கியுள்ளார்.

சிறுவர்கள் கையில் அரிவாள்

தாக்குதலுக்கு ஆளான மாணவரின் உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும் அளவிற்கு எதுவுமில்லை. இந்த தாக்குதலை தடுக்க முயன்ற சமூக அறிவியல் ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர் தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவனை குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.

அதுவும், “பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது” எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....