19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

"கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால்.!" – முதல்வர் விஜய்யின் அறிவிப்பும் MLA-க்களின் பதில்களும்!

Date:

110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அந்தவகையில் சட்டமன்றத்தில் பேசிய மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் என்று சொன்னவுடன் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ்

நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கிறது. என்னிடமும் கார் இருக்கிறது. ஆனால் நம் முதலமைச்சர் கொடுத்த காரில் செல்லும்போது நான் பெருமையாக பணிக்கு செல்வேன்.

அவர் கொடுத்த காரில் தொகுதியைச் சுற்றி வரும்போது அதற்கு இருக்கக்கூடிய கெத்து எம்எல்ஏ என்ற கெத்து… முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சண்முகன், “தமிழகத்தை தாங்கி பிடித்திருக்கும் முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு, அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடுக்கிற காரை இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகின்றனர்” என்று கூறியவுடன் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டிருக்கிறது.

எம்எல்ஏ சிந்து
எம்எல்ஏ சிந்து

தவிர “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்… அவர் யாருக்காக கொடுத்தார்.. ஒருத்தருக்காக கொடுத்தார்..ஊருக்காக கொடுத்தார்” என்று தவெக எம்எல்ஏ சிந்து எம்ஜிஆர் பாட்டு பாடி நன்றி தெரிவிக்க அதற்கு முதல்வர் விஜய் சிரித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" – கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை...

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்…" – சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர்...

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' – தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத்...

TN Assembly: "அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் மற்றும் மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும்.! – முதல்வர் விஜய் | Live

"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய்தமிழக சட்டப்பேரவையில் இன்று...