8
September, 2026

A News 365Times Venture

8
Tuesday
September, 2026

A News 365Times Venture

“கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த விஜய் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து" – உதயநிதி காட்டம்

Date:

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டமன்றம் கூடியது. இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சட்டமன்றத்தில் சுமார் 45 நிமிடங்கள் பேசினார். முதல்வரின் உரைக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதைத் தொடர்ந்து சட்டமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “முதல்வரின் உரையை முழுமையாக கேட்டுவிட்டு, பதிலளிக்க அனுமதி கேட்டோம். அனுமதி வழங்கவில்லை என்றவுடன் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

சட்டமன்றம்

வியாழக்கிழமை நான் சட்டமன்றத்தில் ஆதரத்துடன் 35 நிமிடங்கள் பேசியிருந்தேன். அதில் 15 கேள்விகளை அரசிடம் கேட்டிருந்தேன். அப்போதே, இது உங்கள் ஆட்சி எங்கள் மீது பழிபோடாமல் உங்கள் ஆட்சியில் நடந்தவை குறித்து பேசுங்கள் என்றேன். ஆனால் முதல்வர் இன்று 45 நிமிடங்கள் பேசினார். அதில் 10 -15 நிமிடம் காவல்துறை சார்பாக ஆன்லைன் மோசடிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசினார். அதற்குப் பிறகு எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினார்.

எங்கள் கட்சி உறுப்பினர்கள், கட்சிக் கூட்டங்களில் பேசியதை சட்டமன்றத்தில் பேசி அவைக்குறிப்பில் ஏற்றிக்கொண்டிருந்தார். அதனால், முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வாய்ப்பு வேண்டும் எனக் கேட்டபோது சபாநாயகர் ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்குப் பிறகு யாருடைய உத்தரவு எனத் தெரியவில்லை அனுமதி மறுத்தார். அதனால் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வெளிநடப்பு செய்திருக்கிறோம். எங்களின் 15 கேள்விகளில் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வில்லை. வியாழன் அன்று எங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், திங்கள் கிழமை பதிலளிப்பேன் எனக் கூறி முதல்வர் ஓட்டப்பந்தையம் ஓடிவிட்டார்.

CM Vijay
CM Vijay

நாங்களும், பதில் தயாரித்து வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்று ஒப்பிவித்தல் போட்டி போல ஒப்புவித்திருக்கிறார். நான் முன்பு சொன்னது போல ரீல்ஸ்க்கான பஞ்ச் டைலாக்ஸ், ஆக்டிங், திசைதிருப்பல்தான் அவரின் உரையில் தொடர்ந்தது. அவரின் கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாடுகள், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், எங்கள் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளைக் சொல்கிறார். ஆட்சியில் அவர்தான் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போது போதைப் பொருள் பயன்படுத்திய அமைச்சர், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகிகள், நேற்று பட்டப்பகலில் நடந்த இரண்டு கொலைகள் இது குறித்தெல்லாம் பேசவும் இல்லை. என்னை பேசவும் விடவில்லை.

1970 காலகட்ட அரசியல், சர்காரியா கமிஷன், மிசா பற்றியெல்லாம் பேசுகிறார். மிசா பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. கொடநாட்டில் தன் படத்துக்காக வாட்ச் மேன் வேலை பார்த்த இவர் ஆட்சிக்கு வந்தது, ஒரு விபத்து. இவர் எங்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமலாக்கத்துறை வைத்த குற்றச்சாட்டுகள். அது எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சர்காரியா கமிஷன் அறிக்கை வெளியாகி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அதன்பிறகு 3 முறை ஆட்சி அமைத்திருக்கிறோம். ஆனால், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனைப் பெற்றவர் யார் என்பது மக்களுக்கே தெரியும். இப்போதைய முதல்வர் மீதும் வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. அதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். புதிதாக கட்சியில் இணைந்த விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. நேற்று ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் தவெக குதிரை பேரம் நடத்தியதை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ஆனால், முன்னாள் அமைச்சர் நேரு வீட்டுக்கு ரெய்டு சென்றவர்கள் 6 மணி நேரத்துக்குப் பிறகு எதுவும் கிடைக்காமல் திரும்பிவிட்டார்கள். அதன்பிறகு நேருவே பேட்டியளித்திருந்தார். இந்த அரசின் மீது நான் வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஒரு அமைச்சர் நன்றி தெரிவித்தாரே விஷ்ணு ரெட்டி, அவரும், அவரின் மச்சான் சுஜய் ரெட்டி, அவரின் வியாபார கூட்டாளி அனில் ரெட்டி இவர்களெல்லாம் சேர்ந்து அரசு நடத்தும் மைனிங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இது தொடர்பான விவரங்களை விரைவில் வெளியிடவிருக்கிறோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

விஷ்ணு ரெட்டி யார்? அவருக்கும் அரசுக்கு என்ன தொடர்பு? விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவோம். மேலும். சட்டமன்றத்தில் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளும் சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். முதல்வர் பேசும்போது, சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பி எங்களைப் பார்க்கவே இல்லை. சட்டமன்றத்தில் பா.ஜ.க, அமித் ஷா இல்லை, இந்த வார்த்தைகளின் முதல் எழுத்துக்கூட அவர்களின் வாயிலிருந்து வராது. மனப்பாடம் செய்ததை அப்படியே பேசிவிட்டார். அவ்வளவுதான்!” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு!

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு...

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' – எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள...

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக… நம்பிக்கையில் தவெக' – இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம்...

இடைத்தேர்தல்: `புறக்கணிக்கும் முடிவில் தலைமை; அப்செட் உதயநிதி' – அறிவாலய அப்டேட்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்....