28
August, 2026

A News 365Times Venture

28
Friday
August, 2026

A News 365Times Venture

“கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' – பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசியதென்ன?

Date:

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும், தனியார்துறையில் இட ஒதுக்கீடு என மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாமக சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு

தொடர்ந்து மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்குப் போராட்டம் அறிவிக்கப்படும். இதுவரை நடந்திராத போராட்டமாக அது இருக்கும். 50 ஆண்டுகளாக உங்களுக்காக உழைத்து வருகிறேன். நாமும் ஒருமுறை இந்தத் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னுடைய பேச்சைக் கேளுங்கள். நான் ஆளப்போவதில்லை, எனக்கு அந்த ஆசையுமில்லை. அந்த ஆசை இருந்திருந்தால், கவர்னராக இருந்திருப்பேன், பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன், தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். ஆனால், அந்த ஆசை எனக்கு இல்லாமல் போய்விட்டது. உங்களுக்காக வாழ்கிறேன்.

`இந்த ஊமை ஜனங்களுக்காக உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டைக் கொடுங்கள்’ என்று தம்பி ஸ்டாலினிடம் வாதாடியிருக்கிறேன். நமக்குத் தேவையெல்லாம் உங்களின் ஒரு ஓட்டுதான். இவ்வளவு நாள் என்னுடைய பேச்சைக் கேட்டீர்கள், இடையில் மறந்தீர்கள். அன்று தனியாக 4 தொகுதிகளில் வென்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இது நமக்கு அசிங்கமா இல்லையா? நம்ம ஆளுங்க நமக்கே ஒட்டு போடல.

ராமதாஸ் - பாமக
ராமதாஸ் – பாமக

இனி அப்படி அப்படிச் செய்யக் கூடாது. அப்படி இருந்தீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அப்படியென்றால் உங்களின் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்.எல்.ஏ என்றெல்லாம் பார்க்க மாட்டேன், கடலில் வீசிவிடுவேன். சில பேர் கூட்டணி எங்கு என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றிப் பேசுவதற்கு நான் இருக்கிறேன். நான் முடிவு செய்வேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு 87 வயது. கிழவனுக்கு வயசாகிடுச்சுனு ஏமாற்றப்பார்க்காதீர்கள். ஒழுங்காகக் கட்சியைப் பலப்படுத்துங்கள். என்னால் உழைக்க முடியாது என்பவர்கள் சொல்லுங்கள், வேறு ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கிறேன். ” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது....

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" – கர்நாடக முதல்வர்

கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப்...

'புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ – பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை...

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்… நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை...