15
May, 2026

A News 365Times Venture

15
Friday
May, 2026

A News 365Times Venture

குழந்தை பெற கைதிக்கு பரோல் கேட்ட மனைவி: `குழந்தை களங்கத்தை சுமக்க நேரிடும்'- நீதிபதிகள் கருத்து

Date:

சிவகங்கை மாவட்​டம் திருப்​பாச்​சேத்தி பகு​தி​யைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில,” என் கணவர் மதுரை மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​டனை கைதி​யாக உள்​ளார். என் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்​கொள்ள விரும்​பு​கிறேன். இதற்​காக கரு​வுறு​தல் சிகிச்சை மேற்​கொள்​வதற்​காக என் கணவருக்கு போலீஸ் பாது​காவலர்​கள் இல்​லாமல் 21 நாட்​கள் சாதாரண பரோல் விடு​முறை வழங்​கக்​கோரி மதுரை சிறைத்​துறை கண்​காணிப்​பாளரிடம் மனு அளித்​தேன்.

என் மனுவை சிறை கண்​காணிப்​பாளர் நிராகரித்து உத்​தர​விட்​டார். அந்த உத்தரவை ரத்து செய்​து, எனது கணவருக்கு 21 நாட்​கள் பரோல் விடு​முறை வழங்க உத்​தர​விட வேண்​டும் ” என மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இது தொடர்பாக சிறைத்​துறை கண்​காணிப்​பாளர் தாக்கல் செய்த மனு​வில், ‘‘மனுதா​ரர் அவரது கணவருக்கு விடுப்பு கேட்ட காரணம் உண்​மை​யானது. அதே சமயத்தில்​ ‘அவரை விடு​வித்​தால் அவரது உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்பட வாய்ப்​புள்​ளது, எனவே விடுப்பு வழங்கக் கூடாது’ என நன்னடத்தை அலுவலர் அறிக்கை அளித்​துள்​ளார். கைதிக்கு பரோல் வழங்​கி​னால் சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை ஏற்​பட​ வாய்ப்புள்ளதோடு, கைதிக்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்களுக்​கும் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட​வும் வாய்ப்​புள்​ளது.

எனவே, விடுப்பு வழங்​கக் கூடாது என திருப்​பாச்​சேத்தி காவல் ஆய்வாளர் கூறி​யுள்​ளார். இவர்​களின் அறிக்கை அடிப்​படை​யில் கைதி​யின் விடுப்பு கோரிக்கை நிராகரிக்​கப்​பட்​டது’’ என தெரிவிக்​கப்​பட்​டிருந்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இதனை கேட்ட, என்​.ஆனந்த் வெங்​கடேஷ், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் ,” தண்​டனை பெற்​றவர் மூலம் ஒரு குழந்​தையைப் பெற்​றெடுப்​பதற்​கான மனு​தா​ரரின் உரிமையை கருத்​தில் கொள்ள வேண்​டி​யுள்​ளது.

இந்த வழக்​கில் மனு​தா​ரரும் தண்​டனை பெற்​றவரும், குழந்தை பிறப்புரிமையை வசதியாக புறக்கணிக்​கின்​றனர். குழந்தை இவ்​வுலகில் நுழை​யும்​ போது 3 கொலைகள் உள்​ளிட்ட கொடூர​மான குற்​றங்​களைச் செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ‘ஒரு கைதி​யின் குழந்தை’ என்ற களங்​கத்துடன் வளரும்.

மனு​தா​ரர் கோரிக்​கையை அனு​ம​தித்​தால் குழந்தை தரப்பில் எந்த தவறும் இல்​லாமல் வாழ்​நாள் முழு​வதும் ஒரு களங்​கத்​தைச் சுமக்​கும். குழந்​தையை பெற்று வளர்ப்​ப​தற்கு மனு​தா​ரருக்​கோ, தண்​டனை கைதிக்கோ உரிமை​யில்​லை. இதனால் சாதாரண விடுப்பு வழங்க மறுத்து சிறைத்துறை கண்​காணிப்​பாளர் பிறப்பித்த உத்​தர​வில் தவறில்லை. அதில், நீதி​மன்​றம் தலையிட வேண்​டிய​தில்​லை. மனு தள்​ளு​படி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எடப்பாடிதான் எங்கள் தலைவர்; மாற்றுக் கருத்து இல்லை’ – வேலுமணி அணியில் இருந்து தாவிய கே.சி.வீரமணி

அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய...

`உலகப் பொருளாதாரம் சரிவின் விளிம்பில்… 1970களை மிஞ்சும் பேரழிவு?' – சிங்கப்பூர் பிரதமர் எச்சரிக்கை

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பெருவழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு...

புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' – மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள...

தவெக: “திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல்...