17
October, 2026

A News 365Times Venture

17
Saturday
October, 2026

A News 365Times Venture

காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது" – இபிஎஸ் குற்றச்சாட்டு

Date:

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,

“சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகாவிலிருந்து உரிய காவிரி நீரைப் பெறாததால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குத் தமிழக அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்குத் தேவையான உரிய நீரை கர்நாடக அரசு வழங்க பாரதப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட தமிழக அரசு வலியுறுத்தவில்லை.

தமிழக அரசு முறையான திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. இதனால், தமிழக மக்களின் எதிர்கால குடிநீர் தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இதுவரை வாங்கிய ரஷ்ய எண்ணெய்க்கு 'நோ' 100% வரி! ட்ரம்ப்-ன் 'ட்விஸ்ட்'; இந்தியாவுக்குச் சாதகமானதா?

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று வருகிறது அமெரிக்கா....

ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: 'அனைத்து குண்டுகளின் தாய்' ஆயுதத்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க ராணுவம்...

விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! – கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7...