14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

'காரைக்குடியில் 4 நாள்கள்…' – சீமானின் இறுதிக் கட்ட பிரசார வியூகமென்ன?

Date:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இறுதிக்கட்ட பரப்புரை பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் காரைக்குடியில் அவர் கூடுதல் நாள்கள் செலவிட இருப்பதாகவும் சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள்.

சீமான்

நம்மிடம் பேசியவர்கள், “கடந்த மார்ச் 23-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் பிரசாரத்தை தொடங்கினார் அண்ணன் சீமான், தற்போதுவரை டெல்டா மண்டலம் நீங்களாக மற்ற மண்டல பிரசாரங்களை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டார். அவரது பரப்புரை பயணத்தில் தென்மாவட்டங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இதுவரை கூடாத கூட்டத்தை பார்த்தோம். மற்ற மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இச்சூழலில் இறுதிகட்ட பரப்புரை பயணம் காரைக்குடியை மையப்படுத்தி அமையவுள்ளது” என்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள் “நான்குமுனைப் போட்டியால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆகையால் வாக்கு சதவிகிதத்தில் கவனம் செலுத்துவதைவிட அண்ணனை சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். ஆகையால் தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு 4 நாள்களுக்கு முன்பே அண்ணன் சீமானை காரைக்குடிக்கு வரவழைத்து தொடர் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடுகிறோம். அதுபோக, தமிழ்நாட்டில் முன்னணி நிர்வாகிகள் பலநூறு பேரை தொகுதிக்குள் இறக்கி வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தவுள்ளோம். இதுநாள்வரை நாம் தமிழர் அரசு எப்படியிருக்கும் எனப் பேசிய சீமான், அந்த 4 நாள்களில் தி.மு.க தொடங்கி த.வெ.க வரை அனைவரையும் போட்டுத் தாக்குவார். அவரின் இறுதிக்கட்ட பரப்புரை மாநிலம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும்படி அமையவுள்ளது” என்றனர்.

சீமான்
சீமான்

காரைக்குடி கள நிலவரம் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், “காரைக்குடியில் யார் வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது. ஆகவே எனவே எஞ்சி இருக்கும் நாள்களின் பிரசாரம் அனைவருக்குமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது” என்றனர்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி – பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு...

Exclusive: ’நான் அரசியலுக்கு வருவேனா?’ – வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் பளிச் பதில்

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல் நலம்...

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' – அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக்...

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ – வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை...