22
May, 2026

A News 365Times Venture

22
Friday
May, 2026

A News 365Times Venture

’காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளது’– தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

Date:

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான மையக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தீய சக்தி தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்வதாக கூறிய தவெக, தீய சக்தியின் ஒரு பங்காக இருந்தவர்கள் உடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி புறவாயில் வழியாக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகள் சூழ்ந்த கட்சியாக உள்ளது. மாற்றத்தை கொண்டு வருவதாக கூறிய த.வெ.க, காங்கிரஸை வைத்து கொண்டு எப்படி மாற்றம் தரும்? காங்கிரஸ் தரும் அழுத்தத்திற்கு த.வெ.க இடம் தரக் கூடாது.

பாஜக கூட்டம்

கடந்த தி.மு.க ஆட்சியில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால்தான் மக்கள் அக்கட்சியை புறக்கணித்தார்கள். பி.எம் ஶ்ரீ போன்ற மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு த.வெ.க ஆதரவு தர வேண்டும். வந்தே மாதரம் பாடல் சர்ச்சை தேவையில்லாதது. அப்பாடல் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பிய பாடல். இளைஞர்களுக்கு தேசபக்தி உணர்வை வளர்க்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதை மாநில அரசுகள் நிராகரிக்க முடியாது. இது மத்திய அரசின் தனிப்பட்ட உத்தரவு அல்ல, நாட்டின் நலனுக்கானது என்பதால் அதைப் பின்பற்றுவது கட்டாயம்.

அதேபோல, தி.மு.க. ஆட்சியில் சனாதனம், வந்தே மாதரம் போன்ற விஷயங்களை அரசியலாக்கினர். இது போன்ற உணர்ச்சிபூர்வமான அரசியலைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்குத் திரும்ப வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விமர்சனம் செய்யும் ராகுல் காந்திக்கு அதன் பின்னணி புரிதல் இல்லை. அந்த பயணங்கள் அனைத்தும் நாட்டின் நலனுக்கானவை. அவை சுற்றுலா இல்லை. தமிழகத்தில் 7 பட்டியலினத்தவருக்கு அமைச்சரவையில் இடமளித்து இருப்பது ஆரோக்கியமானது. அவர்கள் சிறப்பாக செயல்பட முதலமைச்சர் விஜய் வழிகாட்ட வேண்டும்” என்றார். பா.ஜ.க-வில் நிர்வாகிகள் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? – மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில்...

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் – டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு,...

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்… பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' – உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்'  வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக...

லால்குடியில் நழுவிய வெற்றி; அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக...