29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; "மேல்முறையீடு செய்க" – திருமா

Date:

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதானக் குற்றப் பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளனும் குற்றப் பத்திரிகையை ரத்து செய்ததற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கவின்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2) கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான ‘குற்றச்சாற்று அறிக்கையை’ மதுரை உயர்நீதிமன்றம் ‘ரத்து’ செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை ‘ரத்து’ செய்வது ‘தவறான முன்மாதிரி’ ஆகும்.

கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்ததும் இன்னொரு கொலை வழக்கில் கூலிப்படையினரோடு தொடர்பிருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரையும் அவரது மனைவியையையும் குற்றமற்றவர்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவண செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு...

புதுச்சேரி: காவல்துறை SP மீது பாலியல் வன்கொடுமை வழக்கு; நீதிமன்றத்தின் கண்டிப்பால் பணிந்த அரசு

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி...

நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து – உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்று சமூகத்தைச்...

"தவெக அரசு 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கிவிட்டது" – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...