10
July, 2026

A News 365Times Venture

10
Friday
July, 2026

A News 365Times Venture

`களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? ஓடு… ஓடு… ஓடு' விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

Date:

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கி இருக்கிறார்.

கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தவிர “காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்ததா? கரூர் சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள்?” என கரூர் துயர சம்பவம் குறித்தும் பேசினார்.

முதல்வர் விஜய்

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், பதிவிட்டிருக்கிறார்.

அதில், `கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு…” என்று விமர்சித்திருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'டிசம்பரில் வங்கதேசத்திற்குத் திரும்புகிறேன்; எந்த அரசும் தவறுக்கு அப்பாற்பட்டது அல்ல' – ஷேக் ஹசீனா

2024-ம் ஆண்டு வேலைவாய்ப்பு கோட்டா பிரச்னை, ஊழல் போன்ற காரணங்களால் உள்நாட்டு...

தமிழ்நாடு இடைத்தேர்தல்: 5 தொகுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட தடை; முன்னாள் MLA-களுக்கு செக்!

தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது. அவை திருச்சி...

'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' – குமுறும் தீயணைப்பு காவலர்கள்!

தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு...

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"- ஆளுநர் அர்லேகர் பேச்சு

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி...