18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

கல்வி நிதி விவகாரம்: “தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்" -உதயநிதி ஸ்டாலின் காட்டம்

Date:

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இது தமிழ்நாட்டின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முதல் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது. நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் – சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும். மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை இருகூர் கொடூரம்: “பெற்றோரும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்" – திமுக தலைவர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப்...

“எங்களுக்கும் பேச தெரியும்; அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்..!" – மாணிக்கம் தாக்கூர்

திருச்செந்தூர் தொகுதி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா...

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள...

PM SHRI திட்டம்: “தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை...