19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: "தமிழக அரசு அதிகாரப்பூர்வ கண்டனம்கூட தெரிவிக்கவில்லை" – உதயநிதி

Date:

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்டு ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது.

அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்​துறை​யினர் நாட்டுத் துப்​பாக்​கியால் தாக்​குதல் நடத்​தி​ய​தாகக் கூறப்படுகிறது.

இதில், ம‌ரியமங்​கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கிற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

முதல்வர் விஜய்

இதனிடையே கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாகத் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.

அதே நேரம் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்… எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.

த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்தச் சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின்போது, கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்குப் பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' – தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத்...

"கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால்.!" – முதல்வர் விஜய்யின் அறிவிப்பும் MLA-க்களின் பதில்களும்!

110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும்...

TN Assembly: "அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் மற்றும் மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும்.! – முதல்வர் விஜய் | Live

"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய்தமிழக சட்டப்பேரவையில் இன்று...

திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைக் கேட்ட தாசில்தார்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறை தாசில்தார் அய்யாசாமி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...