15
July, 2026

A News 365Times Venture

15
Wednesday
July, 2026

A News 365Times Venture

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? – விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

Date:

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவி கொடுக்கப்படவிருக்கிறதாம். முதல்வர் விஜய்யே தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டு மதியழகனின் பெயரை டிக் அடித்திருப்பதாக கூறுகின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

கரூர் மதி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், ‘கடந்த 2 ஆண்டுகளாக கட்சிக்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகள் எல்லாரையும் எதோ ஒருவிதத்தில் அங்கீகரித்து விட வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். அதனால்தான் தேர்தலில் போட்டியிடாமல் தீவிரமாக பிரசாரம் செய்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் பதவியே முதல்வரே கைப்பட வழங்கினார்.

அந்தவகையில், கரூர் மதியழகனுக்கும் முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவியை கொடுக்க முதல்வர் முடிவெடுத்திருக்கிறார். கரூர் சம்பவத்தின் போது காவல்துறை முதலில் கைது செய்தது கரூர் மத்திய மாவட்டச் செயலாளர் மதியழகனைத்தான். அப்போதே எங்களின் தலைவர் அவரை நினைத்து வருந்தி மனம் நொந்து போனார். சிறையிலிருந்து வந்த பிறகு மதியழகனை குடும்பத்தோடு நேரில் அழைத்து நன்றி கூறி தைரியம் சொன்னார்.

கரூர் மதி
கரூர் மதி

‘அவருக்கு என்ன செய்யணும்னு நாமதான் பார்த்து செய்யணும்’ என உடனிருந்தவர்களிடம் கூறி மதி மீது தனிப்பட்ட அக்கறையும் எடுத்துக் கொண்டார். தேர்தலில் சீட் கொடுத்த போதிலும் மதி தோல்வியடைந்தார். ஆயினும் மதிக்கு உரிய கௌரவத்தை கொடுக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். அதனால்தான் முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவிக்கு மதியின் பெயரை டிக் அடித்து வைத்திருக்கிறார். மேலும், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சிக்கு புதிதாக வந்திருப்பதால் மதியின் இடத்துக்கு ஆபத்து வருமோ என்று எழுந்த பேச்சுகளுக்கும் கூட இதன்மூலம் முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்’ என்கின்றனர்.

‘வாரிய பதவிகளுக்கு அத்தனை அதிகாரம் கிடையாது. அது ஒரு கௌரவம் மட்டுமே. அதை வாங்கிக் கொண்டு மதி திருப்தியடைந்தால் கரூரில் எம்.ஆர்.வியின் ஆதிக்கமே மேலோங்கும்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர்...

"நான் எந்தக் குற்றமும் செய்யாதவன்; நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன்" – எ.வ.வேலு பேச்சு

சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முறைகேடு...

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு...