11
July, 2026

A News 365Times Venture

11
Saturday
July, 2026

A News 365Times Venture

கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' – உயர் நீதிமன்றம்

Date:

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்நதவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்குவது விசாரணையை பாதிக்கும் என்பதோடு சாட்சிகள் கலையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை.  கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுக்கள்  மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு அவர்களுக்கு பொருளாதார உதவி தேவை தானே? அரசின் கொள்கைகளில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. ஆனாலும் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்காலிக பணி வழங்கலாம்” எனக்கூறி வழக்கின் விசாரணையை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சியையும் நீதிமன்றமே தாமாக முன்வந்து இணைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பள்ளியில் தவெக நிகழ்ச்சி: `அதிலென்ன இருக்கு… இது ஒன்னும் புதுசு இல்லை' – அமைச்சர் விஸ்வநாதன்

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட த.வெ.க நிகழ்ச்சி, அரசு பள்ளியில் ஒளிபரப்பு...

'ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் சந்தித்துக் கொண்டதை யாரும் விவாதிக்கவில்லை, ஆனால்.!'- திருமா கூறியதென்ன?

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது....

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி – EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG...

'It's over' – ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் – மீண்டும் போர் தொடக்கமா?

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதலில்,...