3
September, 2026

A News 365Times Venture

3
Thursday
September, 2026

A News 365Times Venture

`கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்!’ #VikatanForFreedomOfExpression

Date:

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.

இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

#VikatanAgainstOppression #VikatanForFreedomOfExpression

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரயில்வே நிர்வாகத்தில் அலட்சியத்தால் பறிபோன பெண்ணின் அரசு வேலை; மனித உரிமைகள் ஆணையத்தால் கிடைத்த நீதி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பெட்டியைச் சேர்ந்தவர் கே.ஜெயஸ்மிதா. திருவனந்தபுரத்தில் தனியாக...

'குட்டிக்கதை சொல்லாமல் நேராக பதில் சொல்லுங்கள்!' – முதல்வரை நேரடியாக சாடிய உதயநிதி

சட்டமன்றத்தில் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம்...

தமிழ்நாட்டில் குறைந்த GST வசூல் – இதற்கு மக்களின் நுகர்வு தான் முக்கிய காரணமா?

மத்திய அரசு ஜி.எஸ்.டி வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் மாநில ஜி.எஸ்.டி...

'முதலில் ஓடியது யார்?' – முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காரசார சண்டை!

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்...