22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

Date:

அமெரிக்கா – ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.

இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.

ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி, கடந்த மார்ச் மாதத்தில் சீனா 836 டன் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சீனா ஒவ்வொரு மார்ச் மாதமும் கிட்டத்தட்ட 306 டன் அளவில் தான் வெள்ளியை இறக்குமதி செய்திருக்கிறது.

ஆக, இந்த எண்ணிக்கை இதுவரையில் இல்லாத மிகப்பெரிய அளவிலான இறக்குமதியாக பார்க்கப்படுகிறது.

வெள்ளி

சீனா வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று, தங்கத்தை விட, வெள்ளி விலை குறைவாக இருப்பதால், சீன ரீடெயில் முதலீட்டாளர்கள் வெள்ளியில் அதிக முதலீடுகள் செய்கின்றனர்.

இரண்டு, சோலார் ஆற்றல் மற்றும் அது சம்பந்தமான உற்பத்திகளில் மிக தீவிரம் காட்டி வருகிறது சீனா. அந்தத் தயாரிப்புகளுக்கு வெள்ளி மிக முக்கியமானது.

கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை, சீனாவில் ஏற்றுமதி வரிச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அதற்குள் அதிக ஏற்றுமதியை செய்துவிட வேண்டும் என்று சோலார் தயாரிப்புகள் அதிகரிக்கப்பட்டன.

இதன் காரணமாகவும், வெள்ளியின் இறக்குமதி உயர்த்தப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை தெற்கு: "23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள்" – அண்ணாமலை காட்டம்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதி...

TN Assembly Elections 2026: தேர்தல் பெருவிழாவின் க்ளைமாக்ஸ்; வாக்குப்பதிவுக்குத் தயார் நிலையில் தமிழ்நாடு!

2026 சட்டமன்றத் தேர்தல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7...

`கோவை தெற்கு தொகுதி தேர்தலை நிறுத்துங்கள்' – தர்ணாவில் இறங்கிய அதிமுக வேட்பாளர்!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் அதீத பணப்பட்டுவாடாவைத் தடுக்கத்...