3
October, 2026

A News 365Times Venture

3
Saturday
October, 2026

A News 365Times Venture

"எழுந்து செயல்பட வேண்டும் என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்"- போன்காலில் மோடியிடம் ஸ்மித் மிச்சார்

Date:

ஃபிளைதுபாய் விமானச் சம்பவத்தில் கத்திக் குத்து காயம்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை நேற்று இந்தியப் பிரதமர் மோடி…

“உண்மையான வீரர்… உங்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியிருந்தார்.

அபுதாபியில் மேல்சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரிடம் வீடியோ காலில் பேசினார் மோடி.

அப்போது மோடி, “முழுத் தேசத்தையும் நீங்கள் பெருமையடையச் செய்துள்ளீர்கள்.

மோடி

காத்திருக்கிறது…

பாரதம் உங்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறது. நேற்றைய தினம் உங்கள் உடல்நலனுக்காக நாடு முழுவதிலும் உள்ள கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

உங்களுக்குச் சிறந்த முறையில் பராமரித்துச் சிகிச்சையளித்த சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், என்னைத் தொலைபேசியில் அழைக்கலாம்” என்று பேசினார்.

ஸ்மித் மிச்சார்‌ பேச்சு

மோடியிடம் ஸ்மித் மச்சார், “நீங்கள்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வழிகாட்டி.

இன்று நீங்கள் என்னை ஊக்கப்படுத்திய விதம் எனக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கிறது.

எனக்குக் கடுமையான பல காயங்கள் இருந்தன.

ஆனால் ‘நான் எழுந்து செயல்பட்டே ஆக வேண்டும்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அந்த இக்கட்டான சூழலில், என்னை நானே உந்தித் தள்ளி, காக்பிட் கதவைத் திறந்தேன்.

எனக்கு எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் ஹனுமான் சாலிசாவைச் சொல்வேன்.

ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்

அந்த நேரத்திலும் கூட, நான் ஹனுமான் சாலிசாவை மட்டுமே தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

இன்று உங்களிடமிருந்து வந்த இந்த ஒரு அழைப்பு, எனக்கு உண்மையிலேயே மிகவும் பெருமை.

உங்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை” என்று பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரத்தில் முதல்வர் விஜய் நாளை ரோட்ஷோ; முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அமைச்சர்கள் | Photos

INDIA BLOC: கார்கே திட்டமும் பதறியடித்து வந்த தவெகவும் - இந்தியா...

"பெண் வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?" – ஸ்டாலினுக்கு கனிமொழி சந்தோஷ் கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க வேட்பாளர் சத்யபாமா குறித்து தி.மு.க தலைவர்...

"ஆபாசம், வன்மம், வக்கிரம்…" – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக...

INDIA BLOC: கார்கே திட்டமும் பதறியடித்து வந்த தவெகவும் – இந்தியா கூட்டணிக்குள் தவெக நுழைந்த பின்னணி!

தொடங்கிய அதிருப்தி....தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, காங்கிரஸ் - திமுக...