3
November, 2026

A News 365Times Venture

3
Tuesday
November, 2026

A News 365Times Venture

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' – நெகிழும் சு.வெ

Date:

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் 10 நாட்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த அவரை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் தொடர் தலையீட்டைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி அவர் பாதுகாப்பாக மதுரை வந்து சேர்ந்தார்.

ரஷ்யாவில் சிக்கித் தவித்த மாணவி; பத்திரமாக மீட்க உதவிய எம்.பி சு.வெ

மாணவியை மீட்க உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை நேரில் சந்தித்து எங்கள் உயிர் இருக்கும் வரை உங்களை மறக்க மாட்டோம் என்று பெற்றோர் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக எம்.பி சு.வெங்கடேஷன் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ரஷ்ய தூதரகம், இந்திய தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சகமென எல்லோரும் கைவிரித்த நிலையில்… முகாமில் சிக்கிய மாணவியால் என்ன செய்ய முடியும்? எல்லா நிறுவனங்களும் உண்மைக்கு செவிசாய்க்க மறுத்த பின்னும், நாங்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்தோம். கடந்த ஆறு நாட்களாக எங்கள் எம்.பி அலுவலகத் தோழர்கள் இரவு பகலாகப் போராடினார்கள். இறுதியில்… மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம்!

ரஷ்யாவில் சிக்கித் தவித்த மாணவி; பத்திரமாக மீட்க உதவிய எம்.பி சு.வெ
ரஷ்யாவில் சிக்கித் தவித்த மாணவி; பத்திரமாக மீட்க உதவிய எம்.பி சு.வெ

அந்தத் தாய் எங்களை நோக்கிச் சொன்ன பெரிய வார்த்தைகள், அவர் தனது மகள் குறித்த தவிப்பின் வெளிப்பாடுதான். நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றும் எளிய மனிதர்கள். அந்தத் தாயின் மதிப்புமிக்க வார்த்தைகளைப் பெற்றது எங்கள் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. அன்பின் கண்ணீர் எங்கள் மக்கள் பணிக்கு நிகரற்ற வலிமையைச் சேர்க்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`வெட்கம், திமுக-வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?'- துரைமுருகன் இல்ல திருமணம் குறித்து கி.வீரமணி

தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில்...

`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை...

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி, மகன்கள் உட்பட 7 பேரும் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த...

Roamie: `பண்டிகைக் கால ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள்'- தீர்வு தருமா ரோமி செயலி?

பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று ஆம்னி பேருந்துகளின்...