9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்…" – முற்றும் ஷிண்டே – பட்னாவிஸ் மோதல்!

Date:

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்தது. இப்போது பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருக்கிறார்.

புதிய அரசு பதவியேற்ற பிறகு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இக்கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில அரசு கொடுத்து வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட பிறகு ஏக்நாத் ஷிண்டே கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். அடிக்கடி அதனைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது ஏக்நாத் ஷிண்டே கார் மீது வெடிகுண்டு வீசப்படும் என்று இமெயில் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே

இது குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “கொலை மிரட்டலைக் கண்டு நான் பயப்படவில்லை. இதற்கு முன்பும் அச்சுறுத்தல் வந்திருக்கிறது. கொலை முயற்சியும் நடந்திருக்கிறது. அதைக் கண்டெல்லாம் பயப்படமாட்டேன். என்னைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் சாதாரண கட்சி தொண்டர். அதேசமயம் பால்தாக்கரேயின் தீவிர தொண்டர். சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்த்தவன் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். 2022ம் ஆண்டு ஆட்சியை மாற்றிய பிறகு நான் சட்டமன்றத்தில் முதல் முறையாகப் பேசும்போது தேவேந்திர பட்னாவிஸ் 200 தொகுதிகள் பெறுவார் என்று சொன்னேன். ஆனால் அவர் 232 தொகுதிகள் பெற்றார். அதனால்தான் என்னை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறேன். இதனைப் புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை நியமித்த போது நாசிக் மற்றும் ராய்கட் மாவட்டத்திற்குச் சிவசேனா அமைச்சர்களை நியமிக்கத் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துவிட்டார். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டும் கூட்டங்களிலும் ஏக்நாத் ஷிண்டே சரியாகக் கலந்து கொள்ளாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் அந்த திட்டத்தைத் தற்போது ஃபட்னாவிஸ் நிறுத்தி வைத்துள்ளார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கழுகார்: `சாம்பிராணி போட்ட காக்கி மாஜி டு பாலியல் வழக்கு தொழிலதிபரிடம் கார் வாங்கிய மாவட்டப் புள்ளி!

பூகம்பங்களைக் கிளப்பவிருக்கும் ‘கிங்’ புள்ளி!சாம்பிராணி போட்ட காக்கி மாஜி...கட்சிக்காக உழைத்த சீனியர்கள்...

India – Pakistan Tension: ‘விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம்’ – இண்டிகோ அறிவிப்பு

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்தியா 'ஆபரேஷன்...

India – Pakistan: நள்ளிரவில் களமிறங்கிய கடற்படை… டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்?!

கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு,...