26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

`எனக்கு சித்தப்பாவே இல்லை; மதுரை மன்னராக கற்பனை செய்துகொள்ளும் நிர்மல் குமார்..!" – பி.டி.ஆர் பதில்

Date:

நேற்று செய்தியாளர் சந்திப்பில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் என் தலையீடு இல்லை.

கோவில் குடமுழுக்கில் பி.டி.ஆர். குடும்பம் புறக்கணிக்கப்படவில்லை. பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணியை நன்றாகவே கவனித்துக்கொண்டோம்.

கோவிலைக் கட்டிய பாண்டிய மன்னனை விட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதிகமாகப் பேசுகிறார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பி.டி.ஆர். டிரஸ்ட் தொடர்புடைய திருமண மண்டபத்தை 3 ஆண்டாக முடக்கி வைத்திருந்தார்.

பழனிவேல் தியாகராஜன் முடக்கிய மண்டபத்தைத் திறந்து வைக்க நான் உதவியதால் என் மீது அவருக்குத் தனிப்பட்ட ஈகோ” என்று பேசியிருந்தார்.

இந்த டிரஸ்ட் விவகாரம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

நிர்மல் குமார்

எனக்குச் சித்தப்பாவே கிடையாது

“மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் ‘குடும்ப அறக்கட்டளை’ என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது.

முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்குச் சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது.

நானே புகார் அளித்திருக்கிறேன்

மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன்.

அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார்.

அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர்.

மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

வியப்பில்லை

இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளான அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை.

ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான்.

இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது.

மதுரையின் மன்னராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும்.

அதிகார மையமாக…

தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள்.

ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார்.

ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி,

அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related