20
May, 2026

A News 365Times Venture

20
Wednesday
May, 2026

A News 365Times Venture

'எது சரியோ அதை செய்யுங்க!' உத்தரவிட்ட முதல்வர் விஜய்? – மத்திய அரசுடன் மோத தயாராகும் தமிழக அரசு!

Date:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு அங்கமான பி.எம்.ஸ்ரீ திடத்தில் தமிழக அரசு இன்னும் இணையவில்லை. விரைவில் இந்தத் திட்டத்தில் இணையுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தது. இந்நிலையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

முதல்வர் விஜய்

கடந்த திங்கள் கிழமையன்று கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கூட்டத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்தும் அதில் இணைய மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் பற்றியும் அதிகாரிகள் விரிவாக விளக்கியிருக்கின்றனர்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசிலிருந்து வரவேண்டிய நிதி தடைப்பட்டிருப்பதைப் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்கள் குறித்தும் தெளிவாக விளக்கியிருக்கின்றனர்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர் விஜய், ‘மாநில உரிமைகள் மற்றும் நம்முடைய அடிப்படைக் கொள்கைகள் எதிலும் சறுக்காமல், எது சரியோ அதை செய்யுங்கள்’ என மத்திய அரசு முன்வைக்கும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் மனநிலையில் பேசியிருக்கிறார்.

முதல்வரின் எண்ணவோட்டத்தை அறிந்துகொண்டதால்தான் கூட்டத்தை விட்டு வந்த அமைச்சர் ராஜ் மோகனும் ‘நாங்கள் யாருக்கும் அடிபணியமாட்டோம். இருமொழிக் கொள்கைதான் எங்களின் அடிப்படை’ என வெளிப்படையாக பேசியிருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் அதேவேளையில் துறைக்கு வந்து சேர வேண்டிய நிதியை லாவகமாக காய்களை நகர்த்தி வாங்கவும் திட்டமிடுமாறு கல்வித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மீதான மாற்றுக்கருத்தையும் மாநிலத்துக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை பற்றியும் முதல்வர் வலியுறுத்துவார் என்றும் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" – எம்.பி கனிமொழி எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு,...

கரூரில் 17 காவல்துறை அதிகாரிகள் ஒரே அடியாக அதிரடி மாற்றம்! – பின்னணி என்ன?

கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர்...

'நமது அம்மா' நாளிதழைக் கைப்பற்றிய வேலுமணி; போட்டிக்கு பழனிசாமி தொடங்கிய புதிய நாளிதழ் 'போர்வாள்'!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'நமது அம்மா'. இந்த நாளிதழ் தற்போது அதிமுகவின்...

'அதிமுக நல்லா இருக்கணும்; விசிக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும்!' – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விருப்பம்

அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து...