24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு `அவசர’ பயணம் – பரபரக்கும் அரசியல் களம்

Date:

2025-26 ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை கடந்த 14 ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடர்

இதனைத்தொடர்ந்து மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம், பதிலுரை மற்றும் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

டெல்லியில் புதிய அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு விழாவை ஒட்டி செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக உள்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி தரப்பு. தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சிக்கல்கள், கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசலாம் என அதிமுக தரப்பை சேர்ந்த சிலர் வெளியே பேசினாலும், கூட்டணி குறித்த விவகாரங்களும் அங்கே பேசப்படலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடப்பாடி- மோடி

பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டமன்ற பரபரப்புக்கு இடையேயும் மேற்கொண்டுள்ள இந்த பயணம் தமிழக அரசியலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி… இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்!

பிரதமர் ராஜினாமா!16-ம் நூற்றாண்டில் கடல் வழியே புதிய நாடுகளைக் கண்டறியத் தொடங்கிய...

“த்ரிஷா படத்தை வச்சே ஆகணும்'னு நான் ஏன் சொன்னேன்னா.?' – காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலரின் பதில்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது....

`தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்…' – மு.வீரபாண்டியன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில்...

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' – நீதிபதிகள் வேதனை

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு...