30
September, 2026

A News 365Times Venture

30
Wednesday
September, 2026

A News 365Times Venture

"எடப்பாடி பழனிசாமியின் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது" – செங்கோட்டையன்

Date:

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார், “அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். பொதுவாக தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட வேண்டும்.

செங்கோட்டையன்

ஆனால் தோல்வி பயம் காரணமாக ஒவ்வொரு நாளும் சிந்தித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுகிறார். இந்தத் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது.

அதிமுகவினர் நேரடியாக தவெகவை விமர்சிக்கிறார்கள். யார் யாருக்கு B டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதிமுக தங்களின் தோல்வி பயத்தை மறைக்க இப்படி பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், தமிழக மக்கள் தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்கள். 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் தன்னுடைய வருவாயை பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்ற வந்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். வெளிநாடு வாழ் தமிழர்கள் முதல் உள்ளூர் குழந்தைகள் வரை தவெகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இது இந்திய வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும்.

தவெக விஜய்
தவெக விஜய்

அவர் மீது அனைத்துக் கட்சிகளுக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற முடியாது என்பதால்தான் விமர்சனம் செய்கிறார்கள்” என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' – விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்!

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை...

6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தவில்லையா? 'முடக்கப்படலாம்' – என்ன செய்வது?

6 மாதங்களுக்கு மேலாக, ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா? நாளை (அக்டோபர்...

தாராபுரத்தில் விஜய் இன்று பிரசாரம்; ஒட்டுமொத்த தொகுதியையும் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை

தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக...