11
August, 2026

A News 365Times Venture

11
Tuesday
August, 2026

A News 365Times Venture

"ஈரானின் இழப்பீடு யோசனை நல்லா இருக்கு; அதே இழப்பீட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தரணும்" – ட்ரம்ப்

Date:

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அனுமதிக்க ஈரான், ‘அந்த இரு நாடுகளும் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ என்கிற நிபந்தனையை பிளான் செய்து வருகிறது.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்…

“கடந்த ஐந்து மாத கால ராணுவ மோதலின்போது தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிரதிநிதிகள் இழப்பீடு கோரி வருவதைப் பார்க்கிறேன் (அவர்களிடம் அணுஆயுதம் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் போரே தொடங்கியது!).

ட்ரம்ப் பதிவு

ஆனால், நமது பேச்சுவார்த்தைகளிலோ அல்லது கூட்டங்களிலோ இதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசப்படவில்லை!

இருப்பினும், இது ஒரு சுவாரசியமான யோசனைதான். ஏனெனில், இப்போது நானும் ஈரானிடம் இருந்து இழப்பீடு கோருகிறேன்.

தளபதி சுலைமானியின் வழிகாட்டுதலில் தொடங்கி, யூ.எஸ்.எஸ் கோல் (USS Cole) போர்க்கப்பல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் உட்பட, ஈரானின் வீதியோரக் குண்டுகள் மற்றும் பல்வேறு மோதல்களால் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்காகவும் வீரர்களுக்காகவும் இந்த இழப்பீட்டைக் கேட்கிறேன்.

அதுமட்டுமன்றி, கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரைத் தவிர்த்து, கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் கொன்று குவித்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இனிவரும் எந்தவொரு மற்றும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தக் கோரிக்கையை மிக ஆணித்தரமாக முன்வைக்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பஞ்சாப்: ஹர்பஜன் சிங் பகிர்ந்த `ஜோம்பி போதை இளைஞர்கள்' வீடியோ; ஆம் ஆத்மி அரசு பதிலடி!

பா.ஜ.க எம்.பி ஹர்பஜன் சிங் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப்...

’கமல்ஹாசன் பாணியில் கோவையைக் குறிவைக்கிறாரா தனுஷ்?’ – கோவையில் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவது ஏன்?

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை சட்டமன்றத் தொகுதி...

`அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது’– திமுக கூட்டணி குறித்து வானதி விளக்கம்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் நடத்தி வரும் மக்கள்...

"இதுவரை அமித் ஷா இப்படி செய்ததே இல்லை; அவர்களுக்கிடையே பிரச்னையா?" – காங்கிரஸ் கேள்வி

ஜூலை 20-ம் தேதியில் இருந்து இதுவரை நாடாளுமன்றத்தில் 17 அமர்வுகள் நடந்துவிட்டன....