8
September, 2026

A News 365Times Venture

8
Tuesday
September, 2026

A News 365Times Venture

'இளைய தளபதி க்ரூப்ஸ்' – ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? – அமைச்சர் சரத் முழு விளக்கம்!

Date:

பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இதில் பேசிய அமைச்சர் சரத் ‘நாங்களெல்லாம் சாதாரணமாக வரவில்லை…’ தான் ரசிகர் மன்றம் வளர்த்த கதையை எமோஷனலாக பேசியிருந்தார்.

அமைச்சர் சரத் – Sarath

அமைச்சர் சரத் பேசுகையில், ‘மக்கள் இயக்கமாக இருக்கும் போதே மக்கள் பணி சார்ந்து தளபதி எங்களை வழிநடத்தினார். வறுமைக்கோட்டுக்கு கீழான மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரொட்டி, பால், முட்டை திட்டத்தை தளபதி தொடங்க சொன்னார். அதை நாங்கள் சிறப்பாக செய்த போது நேரில் அழைத்து எங்களை பாராட்டி மக்களின் எண்ணங்களை கேட்டு செலவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

உங்கள் பெயரை சொல்லி நாங்கள் மக்கள் பணி செய்தால்தான் நன்றாக இருக்கும் என்றோம். நான் செகண்ட் இயர் ஸ்டூடண்ட் போன்றவன். தாமு அண்ணன் சரவணன் அண்ணன் போன்றோர் எங்களை விட சீனியர்கள். ‘இளைய தளபதி க்ரூப்ஸ்’ என பெயர் வைத்து படிப்படியாக மன்றம் மூலம் வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு மன்றம் போர்டு திறக்க வேண்டுமானால், 25 பார்ம் நிரப்ப வேண்டும். மரக்கன்று நட்டு, பேனா, நோட்டு, புத்தகம் கொடுத்து தண்ணீர் பந்தல் திறந்து ரத்தத்தானம் வைத்து நாடி நரம்பு ரத்தமாக ஊறி மன்றத்திலிருந்து வளர்ந்து வந்திருக்கிறோம். நாங்கள் நேராக இங்கே வந்து உட்காரவில்லை. எங்களின் வெற்றியை பார்க்கிறவர்கள், எங்களின் முயற்சியை பார்ப்பதில்லை. நாங்கள் மின்னி மறையும் மின் மினி பூச்சி இல்லை. இன்னும் இன்னும் எழுந்து வரும் பீனிக்ஸ் பறவை’ என்று பேசியிருந்தார்.

சரத்
சரத்

இதே அமைச்சர்தான் தன்னுடைய மானியக்கோரிக்கையின் போது ‘AM, PM பார்க்காமல் உழைக்கும் தலைவா…’ என முதல்வரை ஏகத்துக்கும் புகழ, மறுநாளே முதல்வர் தன்னை யாரும் புகழக் கூடாது என சபாநாயகரிடம் நோட் போட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' – தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி...

"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" – ஈரான் அதிபர் அதிரடி

அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான்...

"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்...

'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு!

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு...