21
November, 2026

A News 365Times Venture

21
Saturday
November, 2026

A News 365Times Venture

"இந்தியாவைப் பாருங்கள்: வட்டி விகிதம் குறைவு, GDP வளர்ச்சி அதிகம்!" – US Fed வங்கியை சாடும் ட்ரம்ப்

Date:

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.75-4% ரேஞ்சிற்குள் உயர்த்தியது. இதற்குப் பணவீக்கம் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால், இந்த வட்டி விகித உயர்வை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. அவர் அமெரிக்க வட்டி விகிதம் 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இனி அடுத்ததும் வட்டி விகிதத்தை ஃபெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்

ட்ரம்ப்பின் நேற்றைய பேச்சு

இது குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவது…

“நம்மிடம் மிகுந்த அரசியல்மயமாக்கப்பட்ட ஃபெடரல் வங்கி இருப்பதால்தான் வட்டி விகிதங்கள் இவ்வளவு அதிகமாக உள்ளன.

நான் அதன் தலைவரைக் குறை சொல்லவில்லை; ஆனால் அந்த அமைப்பே மிகவும் அரசியல்மயமாகிவிட்டது என்பதுதான் உண்மை.

நாம் எப்போதெல்லாம் நல்ல பொருளாதாரப் புள்ளிவிவரங்களை அறிவிக்கிறோமோ, அப்போதெல்லாம் அவர்கள் வட்டி விகிதங்களை உயர்த்துகிறார்கள். அவர்கள் ஒரு காரணத்திற்காகவே அப்படிச் செய்கிறார்கள்.

இந்தியாவைப் பாருங்கள்!

நம்மிடம் சிறப்பான பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது, வட்டி விகிதங்களை உயர்த்திக்கொண்டே போகக் கூடாது.

நமது கடன் தகுதி சிறப்பாக இருப்பதால், வட்டி விகிதங்களைக் குறைக்கத்தான் வேண்டும்.

அப்படிச் செய்தால் நமது ஜிடிபி 4 சதவீதமாக இல்லாமல், 15 அல்லது 20 சதவீதமாக இருக்கும். நம்மால் கடன்களையும் மிக விரைவாக அடைத்துவிட முடியும். அப்படித்தான் இது செயல்பட வேண்டும். ஆனால் நாம் எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்கிறோம்.

இந்தியாவைப் பாருங்கள்; அங்கே வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன. அவர்களது ஜிடிபி 7% ஆக இருக்கிறது. நம்மால் 14%, 15%, ஏன் 20% ஜிடிபி வளர்ச்சியைக் கூட எட்ட முடியும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கணவன் மனைவியின் செல்போனையும் மனைவி கணவனின் செல்போனையும் சோதிக்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? – 18

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ, “நம்ம ரெண்டு பேரும் நம்ம செல்போன்களை...

`பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?' – நீதிபதி கேள்வி

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு...

"விரைவான பதில்களை விட, வேகமான செயல்பாடு தான் சிறந்தது"- ஆந்திரா அமைச்சர் கிண்டலுக்கு கீர்த்தனா பதில்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் மடைமாறுவது சமீபத்தில்...

ரூஸ்வெல்ட் – சர்ச்சில் – ஜோசப் ஸ்டாலின் இடத்தில் ட்ரம்ப் – ஷி – புதின்? புதிய 'யால்டா'வா இது?

உலக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,...