5
October, 2026

A News 365Times Venture

5
Monday
October, 2026

A News 365Times Venture

இடைத்தேர்தல்: “பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" – அமைச்சர் கீர்த்தனா கேள்வி

Date:

தமிழ்நாட்டின் இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளான திமுக – அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த நான்கு மாதங்களில் அரசு அறிவித்து அமல்படுத்திய பெரிய அளவிலான மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் சிறப்பான செயல்பாட்டில் உள்ளன. இதனால் மக்கள் இந்த மாற்றத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்

எங்கள் வேட்பாளர்களை மக்கள் விரட்டுவதாக வரும் தகவல்கள் அனைத்தும் போலியான சித்தரிக்கப்பட்டவை. சுமார் 10 அமைச்சர்கள் களத்திற்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்தபோது அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பே உண்மை நிலையை உணர்த்துகிறது.

‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ காரணமாக தனியார் பேருந்துகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மக்களின் நலனுக்காகச் செயல்படும் இந்த அரசு, ஏதேனும் குறைகள் அல்லது தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதை உடனடியாகத் திருத்திக் கொள்ளத் தயாராகவே உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் உலவும் செய்திகள் எவ்வித ஆதாரமும் இல்லாதவை.

உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? மேலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வந்த ‘சரவெடி பட்டாசு’ உற்பத்தி தொடர்பான கோரிக்கைக்குத் தற்போது கிடைத்துள்ள நற்பலன், சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டாசுத் தொழிலை மீண்டும் அமோக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கள்ளக்குறிச்சி: `50 ஆண்டு போராட்டம்’ – கோயிலின் பூட்டை உடைத்து தலித் மக்களை வழிபட வைத்த பெண் எஸ்.பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்துக்கு அருகிலிருக்கிறது குரால் கிராமம். அங்கு தனிநபர் ஒருவரின்...

'குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!' -எக்மோரில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை...

தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' – சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?

திருச்சியில் நடந்த அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு முன்பாக...