27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு; பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி; எந்தப் பொருள் எவ்வளவு உயர்வு?

Date:

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் நிறுவனம் தற்போது 230-க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் நெய், தயிர், மோர், லெஸ்சி, பிஸ்கட், இனிப்புகள் உள்ளிட்ட 67 வகையான உப பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வின் அடிப்படையில், 1 லிட்டர் ஆவின் நெய் விலை ரூ.80 உயர்ந்து ரூ.780 ஆகவும், ரூ.365-க்கு விற்ற 500 மி.லி., நெய் ரூ.400க்கும், ரூ.160க்கு விற்ற 200 மி.லி., ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

அதே போல ரூ.30க்கு விற்றமில்க் ஷேக் ரூ.35க்கும், ரூ.35க்கு விற்ற 500 மி.லி., தயிர் ரூ.40, ரூ.140க்கு விற்ற 250 கிராம் மைசூர்பா ரூ.160 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆவின்

இனிப்பு வகைகளின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை அக்.,28 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அரிசி உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் மக்களின் குடும்ப பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகை காலத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மகாராஷ்டிரா வறட்சி: 13000 பேர் தற்கொலை? தாலியை அடகு வைத்து கால்நடை தீவனம் வாங்கும் விவசாயிகள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் விதைத்த...

'Breaking Bad தொடர்ந்து, Prison Break-உம் தொடங்கிவிட்டது.!'- 17 கைதிகள் தப்பியது குறித்து ஸ்டாலின்

தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் தப்பி...

“முதல்வர் நடத்தியது சிறைத்துறை ஆய்வா, ஜோதிடப் பரிகாரமா?" – கைதிகள் தப்பிய விவகாரத்தில் எடப்பாடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில்...

Dhanush: "தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது" – திண்டுக்கல் சீனிவாசன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது...