14
October, 2026

A News 365Times Venture

14
Wednesday
October, 2026

A News 365Times Venture

'அவரை அடக்குங்க முதல்ல…' – மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு – தவெக எம்.எல்.ஏ தாமு!

Date:

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் ரிப்பன் பில்டிங்கின் அம்மா மாளிகையில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு பேசுகையில் தவெக எம்.எல்.ஏ தாமு கமெண்ட் அடிக்க மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கவிருக்கிறது. மழை குறித்த முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க சிறப்புக் கூட்டம் ஒன்று ரிப்பன் பில்டிங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், சேகர்பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பற்றி சேகர் பாபு மைக்கில் பேசுகையில் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ராயபுரம் தவெக எம்.எல்.ஏ தாமு, ‘சீக்கிரம் பேசி முடிங்க. நீங்க பேசுறது போர் அடிக்குது’ என கமெண்ட் அடித்தார். உடனே ஆவேசமான சேகர் பாபு, ‘நான் பேசுறது போர் அடிக்குதா…அப்ப எதுக்கு என்னைய கூப்பிட்டீங்க? ஜனநாயகத்தை மதித்து என்னை அழைத்தீர்கள். நான் வந்தேன். நான் அநாவசியமாக பேசுகிறேனா….நீங்கள் என்னை கூப்பிடாமலேயே இருந்திருக்கலாமே?

சேகர் பாபு - தாமு
சேகர்பாபு – தாமு

நானும் அமைச்சராக இருந்தவன்தான். ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவன்’ என வேகமெடுத்தார். உடனே அமைச்சர் ஆதவ், ‘நீங்கள் பேசுங்கள்…’ என்று கூற, ‘அவரை முதலில் அடக்குங்கள்’ என தாமுவை நோக்கி கூறினார்.

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவும் மோதிக்கொண்டதால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“எல்.முருகனை நீக்கிய மோடி; மத்திய அமைச்சரவையில் தமிழர் யாரும் இல்லை” – பிரவீண் சக்கரவர்த்தி சாடல்

நேற்று மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.தன்னுடைய தொகுதிக்குத்...

சிறையில் சிஜேபி தலைவர்கள்: “துணிவிருந்தால் எமெர்ஜென்ஸியை அமல்படுத்துங்கள் மோடி" – அபிஜித் ஆவேசம்

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரின் பணியைத்...

'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' – கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!

நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி...

மின் கொள்முதல்: “கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு அரசியலில் மின்சாரத்துறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கவிருக்கும் செய்தி...