24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

அரசுப்பேருந்து வாங்க ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்; "வரலாற்றில் முதன்முறை"- கேரள முதல்வர் பாராட்டு

Date:

கேரளத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பேருந்துகளை ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பை கே.எஸ்.ஆர்.டி.சி ஏற்படுத்தி உள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி சேவையை மேம்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி, கூட்டுறவு வங்கிகள், அறக்கட்டளைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் புதிய பேருந்துகளை ஸ்பான்சர் செய்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதையடுத்து எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள மூக்கன்னூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோஸ் என்பவர் கே.எஸ்.ஆர்.டி.சி-க்குப் புதிய பேருந்து வாங்க 40 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

ஹீ-மேன் ஆட்டோ ரோபோ பார்க் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஜோஸ், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடைபெற்ற நிகழ்வில், ரூ.40 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் வி.டி.சதீசனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.ஜான், உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம். ஜான், கே.எஸ்.ஆர்.டி.சி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் பிரமோஜ் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் வாங்க ரூ.40 லட்சம் நிதி வழங்கிய ஜோஸை பாராட்டிய வி.டி.சதீசன்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்த பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கைகோர்க்க வேண்டும் என்ற அரசின் அழைப்பினை ஏற்று இந்த முடிவை எடுத்ததாக ஜோஸ் தெரிவித்தார்.

இந்த நிதி மூலம் வாங்கப்படும் புதிய பேருந்து தனது சொந்த ஊரான அங்கமாலி பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டும் எனவும், புகழ்பெற்ற அதிரப்பள்ளி சுற்றுலாத் தலத்தைத் தென் கேரள மாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் இதன் வழித்தடம் அமைய வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தார் ஜோஸ்.

பேருந்து வாங்க ரூ.40 லட்சம் வழங்கிய ஜோஸ்
பேருந்து வாங்க ரூ.40 லட்சம் வழங்கிய ஜோஸ்

ஜோஸின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அதை நிறைவேற்றுவதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.ஜான் உறுதியளித்தார்.

இதுகுறித்து முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், “தனி நபர் ஒருவர் பேருந்து வாங்க நிதி அளிப்பது கே.எஸ்.ஆர்.டி.சி வரலாற்றிலேயே முதல்முறை. முன்மாதிரியான இந்த உன்னதமான ஆதரவிற்காக தொழிலதிபர் ஜோஸுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். போக்குவரத்துக் கழகத்தை ஆதரிக்க இன்னும் பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" – தவெக சத்தியபாமா

தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள்...

"எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி என்றார் ஆதவ் அர்ஜுனா" – ரகசியம் பகிர்ந்த சீமான்

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை...