20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

`அரசியல் கட்சி லாப நிறுவனமாகும் சூழல் உருவாகும்..!' – வெளிப்படையான டெண்டர் ஏன் அவசியம்? | ஓர் அலசல்

Date:

மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அந்தப் பணிகளை அரசு டெண்டர் விட்டு டெண்டரில் குறைவான தொகையில் அந்த வேலையைச் செய்து தரச் சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் தருவதுதான் வழக்கமான நடைமுறை. எந்த கட்சி ஆட்சியிலிருக்கிறதோ, அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பெரும்பாலும் இந்தக் காண்ட்ராக்டுகள் கிடைத்து வந்ததுதான் கடந்த காலங்களில் நடந்து வந்தது. ஆனால் அரசியல் பின்புலம் இல்லாத சில நிறுவனங்கள் இந்த டெண்டர் விவகாரத்தில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வந்தன.

PTR பழனிவேல் ராஜன், ஸ்டாலின்

ஒரு கட்டத்தில் டெண்டர் நடைமுறையை ஆன்லைனுக்கு வேறு வழியில்லாமல் மாற்றியது கடந்த திமுக அரசு. இதன்படி 2023 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அனைத்துத் திட்டப் பணிகளையும் மின் ஒப்பந்த முறை வழியாக மட்டுமே செயல்படுத்த வேண்டுமென்கிறது தமிழக அரசின் அரசாணை. ஆனால், நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், `ரூ50 லட்சம் மதிப்பிலான டெண்டர்களுக்கு ஆன்லைனில் டெண்டர் கேட்கத் தேவையில்லை’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

நிதித்துறையின் இந்தப் புதிய அறிவிப்பு, டெண்டர் விவகாரத்தில் மீண்டும் ஊழலுக்கு வழி அமைக்கப்பட்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் கூறுகையில், “புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுத் துறைகளின் அனைத்து டெண்டர்களும் வெளிப்படையான ‘ஓபன் டெண்டர்’ (Open Tender) முறையில்தான் விடப்பட வேண்டும் என்ற பொதுவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், இதுவரை பல துறைகளில் சிறிய தொகை முதல் பெரிய தொகை வரை அனைத்தும் ஓபன் டெண்டர் முறையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன.

அறப்போர் இயக்கம் ஜெயராமன்
அறப்போர் இயக்கம் ஜெயரான்

ஆனால் தற்போது ரூ.50 லட்சம் வரையிலான பணிகளை ‘கொட்டேஷன்’ (Quotation) முறையிலோ அல்லது ‘லிமிடெட் டெண்டர்’ (Limited Tender) முறையிலோ விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்திலேயே அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளையும் ஓபன் டெண்டர் முறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், சில மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாக, ‘பொதுத் துறைகளுக்கு ரூ.25 லட்சம் எனவும், கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் மாநகராட்சி போன்ற அமைப்புகளுக்கு ரூ.50 லட்சம் வரை ஓபன் டெண்டர் வேண்டாம்’ என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரூ.50 லட்சம் மேல் உள்ள பணிகள் மட்டுமே மின்னணு ஒப்பந்தப் புள்ளி (e-Tender) முறைக்குக் கொண்டு வரப்பட்டன.

இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தாலும், ரூ50 லட்சம் கீழ் உள்ள பணிகளை எளிதாகக் கையாள முடிந்ததால், அந்தப் பிரிவில்தான் அதிகப்படியான முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின.

மரிய வில்சன்
மரிய வில்சன்

50 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளை ஓபன் டெண்டர் இல்லாமல் கொட்டேஷன் அல்லது லிமிடெட் டெண்டர் முறையில் விடுவதால் மிக மோசமான தாக்கங்கள் ஏற்படும். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில், `முந்தைய ஆட்சியில் விடப்பட்ட சில ஒப்பந்தங்களை நாங்கள் ரத்து செய்தோம்.

அவற்றை ஆய்வு செய்தபோது, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரே வேலையை, 50 லட்சம் ரூபாய் என்ற உச்சவரம்பிற்குள் கொண்டு வருவதற்காக, தலா 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆறு தனித்தனி டெண்டர்களாகப் பிரித்து வழங்கியிருந்தது தெரியவந்தது’ எனத் தெரிவித்திருந்தது. ‘கொட்டேஷன்’ அல்லது ‘லிமிடெட் டெண்டர்’ முறையில் உள்ள மிகப்பெரிய ஓட்டையே இதுதான். இதில் யாரை ஒப்பந்தத்திற்கு அழைப்பது என்பதைச் சம்பந்தப்பட்ட பொறியாளரே முடிவு செய்கிறார்.

TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்
TVK Vijay | த.வெ.க – முதல்வர் விஜய்

பொறியாளர் தனக்கு வேண்டப்பட்ட ஒரு ஒப்பந்ததாரரை அழைத்து, `இந்த வேலையை உனக்கே தருகிறேன். விதிமுறைக்காக இன்னும் இரண்டு பேரை நீயே போலி நபர்களாக ஏற்பாடு செய்து கொட்டேஷன் கொடு’ என்று கூறிவிடுவார். இவ்வாறு போட்டித் தன்மையற்ற முறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது, வெளிப்படையான போட்டி இல்லாத காரணத்தால், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வேலையைக்கூட 49 லட்சம் ரூபாய்க்கு உயர்த்தி வழங்க முடியும். சம்பந்தப்பட்ட பொறியாளரும் ஒப்பந்ததாரரும் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அளவில் அரசுப் பணத்தைச் சுருட்டுவதற்கான வழியே உருவாகும். இதனால், அரசுப் பணம் விரயமாவதும் முறைகேடுகள் நடப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

மேலும், அரசின் இந்த அறிவிப்பின்மூலம் ஆளும் கட்சியினருக்கே பணிகளை வழங்குவதும், பெரிய அளவில் ஊழல்கள் நடப்பதும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, ஒப்பந்தம் எடுத்தவர்கள் அந்தப் பணியை உண்மையிலேயே செய்வார்களா என்பது கூடச் சந்தேகம்தான். பணத்தை முழுமையாக எடுத்துக்கொண்டு, எந்த வேலையையும் செய்யாமல் ஏமாற்றினால் கூட யாருக்கும் தெரியாத சூழல் உருவாகும். சுருக்கமாகச் சொன்னால், இந்த முறையானது ஊழலுக்கு அஸ்திவாரம் போடும் ஒரு நடவடிக்கையாகவே அமையும்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

“ஊழலை ஒழிப்போம், மாற்றத்தைக் கொண்டு வருவோம்” என்று மக்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது ஏற்புடையதல்ல. இத்தகைய போக்கு தொடர்ந்தால், ஒப்பந்தங்களை எடுப்பதற்காகவும், தொழில் லாபத்திற்காகவுமே பலர் கட்சியில் வந்து சேரும் நிலை உருவாகும். கட்சியே ஒரு வணிக நிறுவனமாக மாறிவிடும். முந்தைய ஆட்சியின் ஊழல் மற்றும் வணிக மாதிரியைப் போலவே, தற்போதைய ஆட்சியும் முழுமையான ஒரு ஊழல் மாதிரியாக மட்டுமே எஞ்சி நிற்கும். இறுதியில் சாமானிய மக்களுக்கு எந்தவொரு பலனும் கிடைக்கப் போவதில்லை.

அதனால்தான், தொகை வரம்பின்றி அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளையும் வெளிப்படையான ‘ஓபன் மற்றும் இ-டெண்டர்’ முறையிலேயே நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். “ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து டெண்டர்கள்களையும் வெளிப்படையான ‘ஓபன் இ-டெண்டர்’ முறையில்தான் விட வேண்டும்” என்பதைத் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்திலேயே (Tender Transparency Act) திருத்தமாகக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, நாங்கள் முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

தவெக விஜய்
தவெக விஜய்

மேலும், நிதித்துறைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் ஆகியோருக்கும் இந்தக் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளோம். சட்டத் திருத்தம் கோரி நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு நேர்மாறாக வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு நேரடியாக ஊழலுக்கு வழிவகை செய்யும். நிதித்துறை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டால்தான் அரசு கஜானாவிற்குப் பணம் மிச்சமாகும். அப்படிப்பட்ட நிதித்துறையிலிருந்தே இத்தகைய ஒரு சுற்றறிக்கை வெளியாகியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்த விவகாரத்தில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்றால், நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பி, இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். ஒருவேளை அரசு எங்களது கோரிக்கையை ஏற்க மறுத்தால், இதை எதிர்த்து ஏதாவது ஒரு வழியில் தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏனெனில், இந்த விஷயத்தை நாங்கள் இப்படியே விட்டுவிட்டால், இதுவரை கொண்டுவரப்பட்ட அனைத்து நல்ல மாற்றங்களும் வீணாகி, மீண்டும் பழைய நிலைமையே திரும்பிவிடும்.” என எச்சரிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஆந்திராவின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!" – ஆந்திரா அமைச்சர் கிண்டல்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கின்றன. தமிழ்நாடு...

`15 ஊழியர்கள் ராஜினாமா? ஆந்திராவுக்கு முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா?' – Guidance Tamil Nadu விளக்கம்

தவெக ஆட்சி தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திராவிற்குச்...

தொடங்கிய இறுதி ஊர்வலம்: வி.எஸ் பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்.எல்.ஏ...

கம்பன் திருவிழாவில் தமிழக அமைச்சர்கள்… காரைக்குடி தமிழ்த்தாய் கோயிலில் தமிழ் விழா நடத்த கோரிக்கை!

தேவகோட்டை கம்பன் கழகம் சார்பில், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழைப் போற்றும் வகையில்...