19
September, 2026

A News 365Times Venture

19
Saturday
September, 2026

A News 365Times Venture

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

Date:

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.

இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் வீடியோ வெளியிட்டிருந்தார் பாரதிதாசன்.

இவர் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று பாரதிதாசன் வீடியோ குறித்துப் பேசியிருந்தார் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.

வன்னி அரசு

இதற்குப் பதில் தரும் விதமாக, நேற்று முன்தினம் (செப்டம்பர் 17), ‘நான் ஆவணத்தை அனுப்பிவிட்டேன். ஆனால், என் மீது தனிநபர் தாக்குதல் நடத்தப்படுகிறது’ என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

பாரதிதாசன் வீடியோவைப் பார்த்த எதிர்க்கட்சிகள் அவருக்கான உதவித்தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்கிற குரல் எழுப்பின.

இதையடுத்து, இன்று பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சென்னை விமான நிலையம்: “ஒரு நல்ல முயற்சி… ஆனால்" – எம்.பி கார்த்தி சிதம்பரம்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு...

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! – பின்னணி என்ன?

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும்...

சென்னை: “தனியார் மயமாகும் விமான நிலையம்?" – கைவிட வலியுறுத்தும் டிடிவி தினகரன்

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் மத்திய...

நீண்ட நாள் ஆசை சக்சஸ்: "Greenland-ன் 'நிரந்தர' கன்ட்ரோல் இனி அமெரிக்காவிற்கே!" – ட்ரம்ப் மகிழ்ச்சி

அமெரிக்காவின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அதன் இருப்பிடத்தின் காரணத்திற்காகவும் எப்போதுமே அமெரிக்க அதிபர்...