6
June, 2026

A News 365Times Venture

6
Saturday
June, 2026

A News 365Times Venture

அன்னை இல்லம்: `எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்க’ – ராம்குமாருக்கு உத்தரவு

Date:

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து..!

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

`எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை’

பிரபு – ராம் குமார்

இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `அன்னை இல்லத்தின் மீது ராம்குமாருக்கு எந்த உரிமையும் அல்லது பங்கும் இல்லை’ எனக்கூறினார்.

இதனையடுத்து, `அன்னை இல்லத்தின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன்’ எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ – பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட...

CJP: பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த இளைஞர்கள் – அவர்கள் சொல்லும் நோக்கம் என்ன?

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு...

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை...

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது....