10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

'அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 கொடுத்தேன்; சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம்'- சீமான்

Date:

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், “விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும் சம்மனை ஒட்டச் சென்றது ஏன்? சம்மன் நான் படிக்கவா, நாட்டு மக்கள் படிக்கவா? காவல்துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காக கைது செய்வீர்களா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஒரே நேரத்தில் நான்கு சம்மன்களை அனுப்புகிறார்கள்.

சீமான்

நான் ஒருவன்தானே இருக்கிறேன். என்னை எதிர்த்து நின்று அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகி விடுமா? எங்கள் வீட்டில் வேலை செய்த பையன் ஒருவரிடம் நான் சாகப்போகிறேன் என்று சொல்லி அழுதிருக்கிறார். அந்த குரல் செய்தியைக் கேட்ட பிறகு தம்பியை பணம் கொடுக்க சொன்னேன். அந்த குரல் செய்தியை நீங்கள் கேட்டிருந்தால் கூட பாவம் என்று சொல்லி பணம் கொடுத்திருப்பீர்கள்.

உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அஞ்சமாட்டேன். 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட முடியுமா? கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? தனித்து நின்று பார்ப்போம்.

சீமான்

விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“எடப்பாடி தொகுதிக்கு… விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” – விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட...

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத்...

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு...

குமரி: விபத்துகளால் பலியாகும் உயிர்கள்; நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள லாரிகள் செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள்...