20
May, 2026

A News 365Times Venture

20
Wednesday
May, 2026

A News 365Times Venture

'அதிமுக நல்லா இருக்கணும்; விசிக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும்!' – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விருப்பம்

Date:

அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தார் முதல்வர் விஜய். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விசிகவை அமைச்சரவையில் இடம்பெறக் கோரி அழைப்பு விடுத்திருக்கிறார்.

முதல்வர் விஜய்

அவர் பேசியதாவது, ‘கூடிய விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். சமூகநீதியின் அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்.

விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென முதல்வர் நினைக்கிறார். அமைச்சரவை ஒரு குடும்பம் போல இருக்க வேண்டும். விசிகவும் ஐ.யூ.எம்.எல் கட்சியினரும் கலந்தாலோசித்துவிட்டு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள்

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியை கொண்டு வர முயன்றார்கள். இன்னொரு பக்கம் திமுகவும் அதிமுகவும் புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயன்றனர். திமுக தங்களின் கொள்கைகளை மறந்துவிட்டு அதிமுகவுடன் இணைய முற்பட்டது. அந்த அதிருப்தியில்தான் சி.வி.சண்முகம் வெளியே வந்து பேசினார்.

அவர் அமைச்சர் பதவிக்காகவோ அதிகாரத்துக்காகவோ பேசவில்லை. அதிமுகவை நாங்கள் தோழமையுடன் தான் பார்க்கிறோம். அந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும்’ என்றார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" – எம்.பி கனிமொழி எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு,...

கரூரில் 17 காவல்துறை அதிகாரிகள் ஒரே அடியாக அதிரடி மாற்றம்! – பின்னணி என்ன?

கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர்...

'எது சரியோ அதை செய்யுங்க!' உத்தரவிட்ட முதல்வர் விஜய்? – மத்திய அரசுடன் மோத தயாராகும் தமிழக அரசு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு அங்கமான பி.எம்.ஸ்ரீ...

'நமது அம்மா' நாளிதழைக் கைப்பற்றிய வேலுமணி; போட்டிக்கு பழனிசாமி தொடங்கிய புதிய நாளிதழ் 'போர்வாள்'!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'நமது அம்மா'. இந்த நாளிதழ் தற்போது அதிமுகவின்...