1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

அதிமுக: "அப்படி இருந்தா சொல்லுங்க அரசியலை விட்டு போய்விடுகிறேன்" – ஜெயக்குமார் எமோஷனல்

Date:

சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று (பிப்.6) பொதுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற வைத்த நீங்கள் 2021-ம் ஆண்டு தேர்தலில் கைவிட்டுடீங்களே? நான் என்ன தப்பு செய்தேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஊரை அடித்து உலையில் போட்டேனா? கட்ட பஞ்சாயத்து பண்ணேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடி மாமூல் கேட்டேனா, இல்லை அடாவடித்தனம் பண்ணி பொறுக்கித்தனம் பண்ணி ரவுடித்தனம் பண்ணேனா? சொல்லுங்க பார்க்கலாம்.

அப்படி ஏதாவது நான் பண்ணியிருந்தால் சொல்லுங்கள் அரசியலை விட்டு நான் போய்விடுகிறேன்.

அந்த மாதிரி விஷயங்களை என்றைக்கும் அ.தி.மு.க. செய்தது கிடையாது. ஜெயக்குமாரும் செய்தது கிடையாது.

உங்களையே சுற்றி சுற்றி வந்தேன். இன்னும் 10 தேர்தல்களில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில்தான் நிற்பேன்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் – முன்னாள் அமைச்சர்

நான் பொதுச்செயலாளரிடம் (பழனிசாமி) கேட்டேன் என்றால் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர் இல்லையென்றால் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட நிற்கலாம்.

ஆனால் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் அது ராயபுரம்தான்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“இந்தியா பெருமிதம் கொள்கிறது”- கத்திக்குத்துப்பட்டும் பயணிகளைக் காப்பாற்றிய விமானிக்கு மோடி பாராட்டு

நேற்று துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திற்கு ஃபிளைதுபாய்...

கவின் ஆணவக்கொலை வழக்கு: "அரசு கொடுத்த ஆவணங்கள் குற்றச்சாட்டுக்கு முரணானவை" – நீதிபதி சொன்னது என்ன?

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர்கள் மீதான...