22
May, 2026

A News 365Times Venture

22
Friday
May, 2026

A News 365Times Venture

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' – ஓர் அலசல்!

Date:

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் தவெக அரசில் அங்கம் வகிக்கின்றன. வரவேற்க வேண்டிய நகர்வு இது.

திருமாவளவன்

ஆனால், திமுகவினர் இன்று காலையிலிருந்தே விசிக மீதும ஐ.யூ.எம்.எல் மீதும் வன்மம் பொதிந்த வசைகளை கக்கி வருவதை பார்க்க முடிகிறது. இதை ஒற்றை நிகழ்வாக கடந்து போகவும் முடியவில்லை. ஜனநாயகம், முற்போக்கு, மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம் என முழங்கும் திமுக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருவித பதட்ட நிலையில் நிதானம் இழந்து செயல்படுவதை கவனிக்க முடிகிறது.

தேர்தல் முடிவுகளில் ஒற்றை பெரும் கட்சியாக தவெக அதிக இடங்களை வென்றிருந்தது. திமுக, அதிமுக, பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே விஜய் ஆட்சியமைப்பதுதான் மக்களின் முடிவுக்கு அளிக்கும் மரியாதை, அதுதான் ஜனநாயகம் எனப் பேசினர். ஆனால், மக்களின் முடிவுக்கு எதிராக, தமிழகத்தின் இத்தனை ஆண்டுகால அரசியலுக்கு எதிராக பாஜகவின் உதவியுடன் அதிமுகவுடன் கூட்டணி வைக்க துணிந்தது திமுக. இந்த திட்டத்தை தங்களின் கூட்டணி கட்சியினரிடமும் முன்வைத்திருக்கின்றனர். பெ.சண்முகம், மு.வீரபாண்டியன், திருமாவளவன் கட்சிக்குள்ளிருந்து கனிமொழி ஆகியோர் இந்தத் திட்டத்துக்கு எதிராக நின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

விசிகவினரும் கம்யூனிஸ்ட்டுகளும் திமுக முன்வைத்த திட்டத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தவும் செய்தனர். 75 ஆண்டுகளை நிறைவு செய்து நூற்றாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி, மாநில சுயாட்சி, சுயமரியாதை, கருத்துரிமை பேசி வளர்ந்த கட்சி இத்தனை தாழ்வான நிலைக்கு சென்று யோசிக்க அதிகாரி வெறியை தவிர வேறென்ன காரணமாக இருக்க முடியும்?

2017 இல் ஜெ இறப்புக்குப் பிறகு தமிழக அரசியலில் அத்தனை குழப்பங்கள். திமுக நினைத்திருந்தால் அப்போது ஆட்சியை வசப்படுத்த பெரும் முயற்சியை செய்து பார்த்திருக்க முடியும். ஆனால், ஸ்டாலின் அதை செய்யவில்லை. கண்ணியமான எதிர்க்கட்சியாக மக்களின் பக்கம் நின்றார். மக்களின் பிரச்னைகளுக்காக ஒட்டுமொத்த கட்சியையும் களத்தில் இறக்கி போராடினார். விளைவு, 2021 இல் மக்கள் திமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினர்.

ஸ்டாலினை முதல்வர் ஆக்கினர். அதே மக்கள்தான் இப்போது திமுக ஆட்சியை தூக்கி எறிந்திருக்கின்றனர். வேறொரு கட்சியை ஆட்சியை நோக்கி நகர்த்தியிருக்கின்றனர். எனில், இந்த முடிவையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? மக்களின் முடிவுக்கு மாறாக ஒரு ஆட்சியை அமைத்து எத்தனை நாளுக்கு நிம்மதியாக அரசை ஓட்டி விட முடியும்? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். அடுத்த ஒரு தேர்தலே வராதா? இந்த யோசனையெல்லாம் திமுக என்கிற பேரியக்கத்தின் மையப்புள்ளிகளுக்கு எப்படி இல்லாமல் போனது?

ஸ்டாலின்
ஸ்டாலின்

எல்லா களேபரங்களும் முடிந்து ஒரு புதிய அரசு ஆட்சியமைக்கிறது. புதிய அரசு மட்டுமில்லை இது. சட்டமன்றத்தில் நுழைந்திருக்கும் பெரும்பாலானோர் புதியவர்கள். அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமாகி செயல்பட இடம் கொடுக்க வேண்டும் இல்லையா? அதற்குள்ளாகவே சட்டமன்றத்தில் ‘பத்தே நாட்களில் இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது’ எனப் பேசுவதில் எந்தவித அடிப்படை அறமும் இல்லையே. மேலும், இந்த அரசு அமைய ஆதரவு தெரிவித்திருக்கும் கட்சிகள் மீதும் அத்தனை வசைகள். ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பது இங்கே கம்யூனிஸ்ட்டுகளை தவிர்த்து அத்தனை கட்சியினருடைய மனதிலும் இருக்கும் பெரும் விருப்பம்.

அதற்கான சூழல் அமையும் போது மக்களின் முடிவை மதித்து தனிப்பெரும் கட்சியாக வந்து நிற்கும் ஒரு கட்சியை ஆதரித்து அரசிலும் பங்கெடுத்திருக்கின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும்? திமுக எத்தனையோ முறை மத்தியில் ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் பங்கை பெற்றிருக்கிறதே. அதே விஷயம் மாநிலத்துக்குள் என வரும்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?

ஒரு அமைச்சரவை எல்லாருக்குமானதாகவும் பல குரல்களுக்கும் இடம் இருக்கக்கூடியதாகவும் இருப்பதை எப்படி தவறென கூற முடியும்? பட்டியலினத்தவர்கள் உரிமைகளுக்காக காலம் காலமாக போராடி நீண்ட நெடும் பயணத்துக்கு பிறகு அதிகாரத்தை நோக்கி நகர்ந்திருக்கும் விசிகவை ஏன் இத்தனை கடுமையாக விமர்சிக்க வேண்டும்? அதுவும் அத்தனை குயுக்தியாக ஆ.ராசா போன்ற இன்னொரு பட்டியலினத்தவரை வைத்தே இத்தனை வேகமான அருவருப்பான தாக்குதலை எதற்காக தொடுக்க வேண்டும்?

சொல்லப்போனால், அதிகாரம் கிடைக்கப்பெறாத மக்களுக்காக தொடங்கப்பட்டு அவர்களுக்கான உரிமையை பேசிய திமுக இந்த நகர்வை மௌனமாக வரவேற்றிருக்க வேண்டும். ஏனெனில், விசிக, ஐ.யூ.எம்.எல், கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோர் திமுகவை அத்தனை தன்மையோடு அணுகுகின்றனர்.

 ஆ.ராசா
ஆ.ராசா

தவெக ஆதரவு நிலைப்பாட்டையும் பெரிய மனதோடு திமுக தலைவர் ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துவிட்டுதான் அறிவிக்கின்றனர். திரைமறைவில் நடந்த திமுக – அதிமுக கூட்டணி என்கிற பேச்சிலும் நடந்தவற்றை திமுக தலைவர்களின் கண்ணியம் முறையில் எவ்வளவு நாகரீகமாக எந்தளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு மட்டுமே வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதற்கான பரிசுதான், ‘திமுகவினருடைய ரத்தத்திலும் வியர்வையிலு வளர்ந்த கட்சிகள்’ என்ற ஆதிக்கத் திமிர் கொண்ட பேச்சுகள் போல. இத்தனை திமிராக பேசும் திமுகவினர் எத்தனை தேர்தலில் திமுக கூட்டணியின்றி வென்றிருக்கிறது என்கிற புள்ளிவிவரத்தையும் கையில் வைத்துக் கொண்டு பேசலாம். வடமாவட்டங்களிலுள்ள பட்டியலின மக்களின் வாக்குகள் விசிக இல்லாமல் திமுகவை நோக்கி நகர்ந்திருக்குமா? உழைக்கும் மக்களின் வாக்குகள் கம்யூனிஸ்டுகள் இல்லாமல் திமுகவை நோக்கி நகர்ந்திருக்குமா? காங்கிரஸ் இல்லாமல் சிறுபான்மையினரின் நம்பிக்கையை முழுமையாக பெற்றிருக்க முடியுமா? எனும் கேள்விகளை மனசாட்சி உள்ள உடன்பிறப்புகள் தங்களை நோக்கியே கேட்டுக் கொள்ள வேண்டும்.

தொடர் வெற்றிகளுக்குப் பிறகான இந்த தோல்வி திமுகவுக்கு பெரும் பதட்டத்தை கொடுத்திருக்கிறது. அதிகாரம் இல்லாமல் 75 வயது முதிர் கட்சியின் கைகள் நடுங்க தொடங்கியிருக்கிறது. நிலைத்தவறி நிதானம் இழந்து கண்ணியம் தவறாமல் ஜனநாயகப் பூர்வ நிலைப்பாட்டை எடுக்கும் கட்சிகளின் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் விடுத்து கொஞ்சம் நிதானமாக யோசித்து மக்களின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக திமுக இருக்க வேண்டும் என்பதே அத்தனை மக்களின் விருப்பமும்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை  அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? – மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில்...

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் – டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு,...

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்… பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' – உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்'  வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக...