24
July, 2026

A News 365Times Venture

24
Friday
July, 2026

A News 365Times Venture

“அண்ணாமலை ஏதாவது பேசிவிட்டு, வாபஸ் வாங்குவார்.. தி.மு.க-வை அசைக்க முடியாது'' -அமைச்சர் கீதாஜீவன்

Date:

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் துறை சார்பாக நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார். இதில் கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக முதல்வர் பொறுப்பேற்ற 15 நாள்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார். பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிரச்னை ஆனபிறகுதான் பெற்றோருக்கே தெரிய வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்னைகள் குறித்து உடனடியாக பெற்றோர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக புகார்கள் வருவதால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். இதுவரை வெளிவராத தகவல்கள் கூட இப்போது வெளியே வருகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி வருகிறார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலமாக தான் அதிக துன்புறுத்தல்கள் வருகின்றன. செல்போன் போன்ற பொருள்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.

பெண்களுக்கு பரிமாறும் அமைச்சர் கீதா ஜீவன்

அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை உருவுவேன் என அண்ணாமலை சவடால் பேசி வருகிறார். அண்ணாமலை ஏதாவது பேசிவிட்டு பின்னர் வாபஸ் வாங்குவார். அவர் சொன்னதை எதையும் சாதித்ததில்லை. தி.மு.க-வை அழிப்பேன் என அவரைப் போல பேசியவர்கள் அழிந்தது தான் சரித்திரம். தி.மு.க-வை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. த.வெ.க குழந்தைகள் அணி குறித்து எந்த கருத்தும் கூறவிரும்பவில்லை. மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்லமுடியாத வகையில் துன்புறுத்தல் இழைக்கப்பட்டன. பா.ஜ.க முதல்வரால் அதை கட்டுப்படுத்த முடியாமல் மணிப்பூர் தவிக்கும் நிலையில், அதை சரி செய்த பின்பு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க பேசட்டும். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லதுதான். மக்களோடு மக்களாக பயணித்தால்தான் மக்கள் பிரச்னைகளை அறிய முடியும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வகுப்புகள் புறக்கணிப்பு; ஜந்தர் மந்தர் பாணி திரள்! – சென்னையில் வேகமெடுக்கும் காக்ரோச் போராட்டம்?

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான...

`மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி'- ஆசிரியராக மாறிய ஓய்வுபெற்ற IPS

பொதுவாக அரசு அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கையைத்...

மீண்டும் தொடங்கிய ட்ரம்பின் 'வரி' ஆட்டம்; இந்தியாவிற்கு சற்று குறைந்த வரி தான் – ஏன்? | Trump Tariff

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போரையும் விடுவதாக இல்லை... வரியையும் விடுவதாக...

"இது சினிமா கிடையாது; Scene பண்ணுவதற்கு"- தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூலை.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்....