19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

அடுத்தகட்ட நடவடிக்கை… நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், சி.வி.சண்முகம் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. இதனிடையே, பேரவை நடவடிக்கைகள் முடிந்த உடனேயே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர்.

சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ

இந்த சந்திப்பின் போது, கட்சிக்குள் நிலவி வரும் அதிருப்திகள், சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எந்தவித அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்றும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளில் செய்யப்பட்ட மாற்றங்களும், முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இந்த அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகின்றன. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பலருக்கு இதுவரை மாற்று பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அந்த பட்டியலில் சி.வி.சண்முகமும் ஒருவர்.

தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கும் சி.வி.சண்முகம், சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது கடும் கோபத்தில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவர் தீவிரமாக பரிசீலித்து கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

கட்சிக்குள் புதிய சிக்கல் உருவாகக்கூடாது என்பதற்காகவும், இந்த விவகாரம் மேலும் பெரிதாகாமல் தடுக்கவும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம் தனது முடிவை மாற்றுவாரா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வாரா என்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள்...

வெள்ளை அறிக்கையின் நோக்கம்… மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலனாக இருக்கட்டும்!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு வெளியிட்டுள்ள பொருளாதாரம் குறித்த ‘வெள்ளை...

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' – தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில்...

`இந்தியா – இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' – இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,...