15
July, 2026

A News 365Times Venture

15
Wednesday
July, 2026

A News 365Times Venture

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குளறுபடி: தலைவர் சுனேத்ரா பவார் பதவி விலக 15 நாள் கெடு!

Date:

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதோடு கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார் கட்சிக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக சுனேத்ரா பவார் இப்பதவிகளை ஏற்றுக்கொண்டார். கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது கட்சியின் நிர்வாகிகளையும் மாற்றியமைத்தார்.

ஆரம்பத்தில் கட்சியின் தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் இருந்தார். தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரபுல் பட்டேல் தேசிய செயற்குழு உறுப்பினர் என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தார். அது தற்போது சுனேத்ரா பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபுல் பட்டேல்

அஜித் பவாரின் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபை எம்.பியுமான பார்த் பவாரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சச்சிதானந்த் சிங் கட்சி தலைவர் சுனேத்ரா பவாருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியில் பல விதிமுறை மீறல்கள் நடந்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். பிப்ரவரி 26 அன்று சுனேத்ரா பவார் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலும் கட்சியின் சட்டத்திற்கு எதிரானது என்றும், சுனேத்ராவின் பதவியை செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சச்சிதானந்த் சிங் அனுப்பியுள்ள சட்டப்பூர்வ நோட்டீஸில், 15 நாள்களுக்குள் அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபுல் பட்டேலும், சுனேத்ரா பவாரின் தேர்வுக்கு முதன் முறையாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,”அஜித் பவாரின் வெற்றிடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. கட்சிக்குள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்று குறிப்பிட்டார். சமீப காலமாக பிரபுல் பட்டேல் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர்...

"நான் எந்தக் குற்றமும் செய்யாதவன்; நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன்" – எ.வ.வேலு பேச்சு

சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முறைகேடு...

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? – விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின்...