11
May, 2025

A News 365Times Venture

11
Sunday
May, 2025

A News 365Times Venture

'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ – ஒமர் அப்துல்லா

Date:

‘ஒமர் அப்துல்லா பதிவு!’

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருக்கிறார்.

ஒமர் அப்துல்லா

பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரலின் அழைப்பையும் கோரிக்கையையும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு ஜம்மு & காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முற்படுவதாகவும், அதேமாதிரி, ராஜஸ்தானிலும் சில பகுதிகளில் மக்களுக்கு தாக்குதலுக்கு முந்தைய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லா

இதனைத்தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இதைப் பற்றி ட்வீட் செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ‘அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆயிற்று? ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கிறது.’ எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

India – Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்" – சீனா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய...

“நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில்,...

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' – விவரித்த கர்னல் சோபியா குரேஷி

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத்...